வேல்ஸ் நிறுவனத்தின் வெற்றி கொண்டாட்டம்: முதல்வர் பழனிசாமி பங்கேற்கிறார்!

 

வேல்ஸ் நிறுவனத்தின் வெற்றி கொண்டாட்டம்: முதல்வர் பழனிசாமி பங்கேற்கிறார்!

அதை கொண்டாடும்  வகையில் வேல்ஸ் நிறுவனம் பிரம்மாண்ட நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்துள்ளது.

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் இந்த ஆண்டு வெளியான திரைப்படங்கள் எல்கேஜி, கோமாளி மற்றும் பப்பி.

comali

 

இந்த மூன்று திரைப்படங்களும் மக்கள் மத்தியில் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதை கொண்டாடும்  வகையில் வேல்ஸ் நிறுவனம் பிரம்மாண்ட நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்துள்ளது.

balaji

இதுகுறித்து வேல்ஸ் பிலிம்  இன்டர்நேஷனல் ஐசரி கணேஷ் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘எங்கள் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல்  சார்பில் 2019 ஆம் ஆண்டு வெளியான எல்கேஜி, கோமாளி மற்றும் பப்பி ஆகிய மூன்று படங்களும் மக்களின் பேராதரவு பெற்று வெற்றி படங்களாக அமைந்தன.  இதை கொண்டும் வகையில் நடைபெறவுள்ள வெற்றி விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி  கலந்துகொண்டு, மூன்று படத்தில் பணியாற்றிய கலைஞர்களுக்கு விருது வழங்கி சிறப்பிக்கவுள்ளார்’ என்று கூறப்பட்டுள்ளது.

இந்த விழாவானது வரும் 24ஆம் தேதி மாலை  6 மணிக்கு சென்னை ராயப்பேட்டை YMCA மைதானத்தில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.