வேலை வெட்டிதான் இல்லை…வேஷ்டி சட்டையுமா இல்லை..? ப.சிதம்பரம் மகனுக்கு வந்த சோதனை..!  

 

வேலை வெட்டிதான் இல்லை…வேஷ்டி சட்டையுமா இல்லை..? ப.சிதம்பரம் மகனுக்கு வந்த சோதனை..!  

செட்டி நாட்டு இளவரசர் என்று காங்கிரஸ் தொண்டர்களால் அன்போடு அழைக்கப்படும், சிவகங்கை தொகுதி வேட்பாளர் கார்த்தி சிதம்பரம், தான் அணிந்து கொள்ள ஒரு பேண்ட்- சட்டை கூட சிவகங்கையில் இல்லை என்று மாணவர்கள் மத்தியில் கூறி இருப்பது வாக்காளர்களை அதிரவைத்துள்ளது.

இழுத்து பறித்து சீட்டை வாங்கி விட்ட சிதம்பரம் மகன் கார்த்தி தனது தேர்தல் பிரசாரத்தில் பின்னிபெடலெடுக்கிறார். சீரியல்களை அப்டேட்டாக வைத்திருக்கும் அவர், சீரியல் தொடர்பாக மக்களிடம் கேள்வி கேட்டு சரியான பதிலை கூறி அசரடிக்கிறார்.

இதனை  கேட்கும் மக்கள் இவர் சீரியலில் வரும் கதாபாத்திரங்களை அப்படியே சரியாக சொல்கிறாரே… சீரியலை தவிர வேற வேலைவெட்டி எதுவும் பார்க்க மாட்டாரோ..? என முணுமுணுக்கின்றனர்.

karthi

செட்டி நாட்டு இளவரசர் என்று காங்கிரஸ் தொண்டர்களால் அன்போடு அழைக்கப்படும், சிவகங்கை தொகுதி வேட்பாளர் கார்த்தி சிதம்பரம், தான் அணிந்து கொள்ள ஒரு பேண்ட்- சட்டை கூட சிவகங்கையில் இல்லை என்று மாணவர்கள் மத்தியில் கூறி இருப்பது வாக்காளர்களை அதிரவைத்துள்ளது.

சென்னையில் கல்லூரி மாணவிகளோடு ராகுல்காந்தி உரையாடி கவனத்தை ஈர்த்தது போல, மாணவ- மாணவிகளோடு தானும் உரையாடி கவனத்தை ஈர்க்கும் திட்டத்துடன், கார்த்தி சிதம்பரம் சிவகங்கையில் உள்ள திருமண மண்டபத்தில் 50 மாணவ மாணவிகளை திருமண மண்டபத்திற்கு அழைத்து வந்து உரையாடினார்.

fxfbxbc
 
பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை சுட்டிக்காட்டிய ஒரு மாணவி, நீங்கள் வெற்றி பெற்றால் பெண்கள் பாதுகாப்புக்கு என்ன நடவடிக்கை எடுப்பீர்கள் என்று கேள்வி எழுப்ப, இதையெல்லாம் சட்டம் போட்டுத் திருத்த முடியாது என்று கூறிய கார்த்தி சிதம்பரம், பெற்றோர் நினைத்தால் மட்டுமே குற்றங்கள் குறையும் என்று விளக்கம் அளித்தார்.

bbxb

முன்னதாக, இந்த நிகழ்ச்சிக்கு பேண்ட் சட்டையில் வந்திருக்க வேண்டும் என்று கூறிய கார்த்தி சிதம்பரம், சிவகங்கையில் தனக்கு பேண்ட் சட்டை ஏதும் இல்லை என்றும், எல்லாம் சென்னையில் இருப்பதால் வேட்டி சட்டையுடன் சந்திக்க வந்திருப்பதாகக் கூறினார். இப்பவே இப்படி ..! ஜெயித்தால் தொகுதி பக்கம் வருவாரா..? இல்லை சென்னையிலேயே இருப்பாரா..? என்ற தயக்கத்துடன் மாணவர்கள் கலந்துரையாடினர்.

இறுதியில் செய்தியாளர்களை சந்தித்த கார்த்தி சிதம்பரம், தான் ஆறரை வயது முதல் அரசியலில் இருப்பதாகவும், இது தனக்கு 11 வது தேர்தல் என்றும் கூறி அனைவரையும் அதிர வைத்தார்.

இதையும் படிங்க: ”பிரபு, சத்யராஜ் உன்னத் தடவுனதெல்லாம் மறந்துபோச்சா கஸ்தூரி?”… விளாசும் லதா எம்.ஜி.ஆர்…