வேலை பார்க்கும் நகரத்திலேயே இருங்க…. சொந்த கிராமத்துக்கு அடிச்சு புரண்டு போகாதீங்க… மக்களுக்கு மோடி வேண்டுகோள்….

 

வேலை பார்க்கும் நகரத்திலேயே இருங்க…. சொந்த கிராமத்துக்கு அடிச்சு புரண்டு போகாதீங்க… மக்களுக்கு மோடி வேண்டுகோள்….

வேலை பார்க்கும் நகரத்திலேயே இருங்க. சொந்த கிராமத்துக்கு செல்ல அவசரபடாதீங்க. கூட்டம் நிறைந்த ரயில்கள் மற்றும் பேருந்துகளில் பயணம் செய்வதால் வைரஸ் பரவும் அபாயம் உள்ளது என பிரதமர் நரேந்திர மோடி மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொரோனா வைரஸ் நம் நாட்டில் தற்போது வேகமாக பரவி வருகிறது. நேற்று மதியம் நிலவரப்படி, நம் நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 300ஐ நெருங்கி விட்டது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பொதுமக்கள் கூட்டம் நிறைந்த பகுதிகளுக்கு செல்வது, கூட்டமாக செல்வது ஆகியவற்றை தவிர்த்தாலே கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கலாம்.

கூட்டம் நிறைந்த ரயில்களில் பயணம்

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நோக்கில் மார்ச் 22ம் தேதி (இன்று) மக்கள் ஊரடங்குக்கு ( காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை) பிரதமர் மோடி அழைப்பு விடுத்து உள்ளார். இந்நிலையில், நகரத்தில் வேலை பார்ப்பவர்கள் தங்களது சொந்த கிராமத்துக்கு செல்வதில் அவசரம் காட்ட வேண்டாம் என  பிரதமர் மோடி நேற்று தனது டிவிட்டரில் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தி மொழியில் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த தொடர்ச்சியான டிவிட்டுகளில் அவர் கூறியிருப்பதாவது: 

கூட்டம் நிறைந்த பஸ்சில் பயணம்

நீங்க எங்கு இருக்கிறீர்களோ அங்கேயே இருங்க இதன் மூலம் நம்மால் வைரஸ் பரவுவதை தடுக்க முடியும். நெரிசல் மிகுந்த ரயில்கள் மற்றும் பேருந்துகளில் பயணம் செய்து நமது உடலத்துடன் விளையாட வேண்டாம். தயவு செய்து உங்களை பற்றியும், உங்கள் குடும்பத்தை பற்றியும் கவலைப்படுங்கள். தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே செல்லாதீர்கள்.

பிரதமர் மோடி

கொரோனா வைரஸ் காரணமாக என்னுடைய பல சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் தாங்கள் பணிபுரியும் நகரத்திலிருந்து தங்களது சொந்த கிராமத்துக்கு அவசரமாக திரும்பி செல்கின்றனர். கூட்டமான ரயில்கள் மற்றும் பஸ்களில் பயணம் செய்வதால் கொரோனா வைரஸை பரப்புவதற்காக ஆபத்துக்கள் உள்ளது. கிராமத்தில் உள்ளவர்களையும் ஆபத்தில் தள்ளுக்கூடும் என்பதால் தயவு செய்து நீங்கள் எங்கு இருக்கிறீர்களோ அங்கேயே இருங்க. என பதிவு செய்து இருந்தார்.