வேலை நேரத்தை 8லிருந்து 10 அல்லது 12 மணி நேரமாக அதிகரிக்க யோசனை…. மத்திய பிரதேச முதல்வர் தகவல்…

 

வேலை நேரத்தை 8லிருந்து 10 அல்லது 12 மணி நேரமாக அதிகரிக்க யோசனை…. மத்திய பிரதேச முதல்வர் தகவல்…

மத்திய பிரதேசத்தில், தினசரி வேலை நேரமான 8 மணி நேரத்தை 10 அல்லது 12 மணி நேரமாக அதிகரிக்க யோசனை செய்து வருவதாக அம்மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தெரிவித்தார்.

மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் பேட்டி ஒன்றில் கூறியதாவது: சிவப்பு மண்டலங்களில் மட்டுமல்ல ஆரஞ்சு மண்டலங்களில் கட்டுப்படுத்துதல் மண்டலங்கள் முழுமையாக சீல் வைக்கப்படும். ஆரஞ்சு மற்றும் பச்சை மண்டலங்களில் பொருளாதார நடவடிக்கைகள் அனுமதிக்கப்படும். நேற்று மண்டி சட்டத்தை மாற்றியது போல், கோவிட்-19 கட்டுப்படுத்த பல வெளிப்புற நடவடிக்கைகளை நாங்கள் எடுத்து வருகிறோம்.

பணி நேரம் அதிகரிப்பு

விவசாயிகள் தற்போது சந்தைக்கு செல்ல வேண்டாம். வர்த்தகர்கள் விவசாயிகளிடம் பொருட்களை வாங்க அவர்களை தேடி செல்வார்கள். அதேபோல் வர்த்தகர்களுக்கான விதிமுறைகளை தளர்த்தவும் நாங்கள் திட்டமிட்டுள்ளோம். நெருக்கடியை வாய்ப்பாக மாற்றும் நேரம் இது. நாம் தொழிலாளர் சட்டங்களை திருத்த வேண்டும் மற்றும் குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயம் செய்ய வேண்டும்.

கடை திறப்பு

தினசரி பணி நேரத்தை 8 மணி நேரத்தை 10 அல்லது 12 மணி நேரமாக அதிகரிக்க யோசனை செய்து வருகிறோம். அதற்கு தகுந்தபடி சம்பளம் வழங்கப்படும். தொழிலாளர்களின் வருவாய் மற்றும் ஆலையின் உற்பத்தியும் இந்த வழியில் அதிகரிக்கும். கடைகளை ஏன் நாம் நள்ளிரவு வரை (பாதுகாப்பான மண்டலங்களில்) திறப்பதில்லை?. நாங்கள் அதிலும் மாற்றம் செய்ய திட்டமிடுகிறோம். நாம் நம்முடைய வாழ்க்கை முறையை மாற்றுவது அவசியம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.