வேலை செய்தவர்களுக்கு சம்பளம் கொடுத்த மேலாளர்! மிரட்டிய சரவண பவன் நிர்வாகம்… தூக்கில் தொங்கிய மேலாளர்

 

வேலை செய்தவர்களுக்கு சம்பளம் கொடுத்த மேலாளர்! மிரட்டிய சரவண பவன் நிர்வாகம்… தூக்கில் தொங்கிய மேலாளர்

சில மாதங்களாக, வேலையாட்களுக்கு நிர்வாகம் சரியாக ஊதியம்  வழங்கவில்லை. இதையடுத்து, பழனியப்பன் சென்னை தலைமை அலுவலகத்தில் பேசியிருக்கிறார். நிர்வாகம்  சில  சிக்கல்களில் இருப்பதால் அடுத்த மாதம் சேர்த்துக் கொடுத்துவிடலாம் என்று பழனியப்பனிடம் தெரிவித்திருக்கிறார்கள். இதை பழனியப்பன் ஊழியர்களிடம் தெரிவித்த போது  அதை  அவர்கள்  ஏற்காமல் போராட்டம் நடத்தப் போவதாகக்  கூறியிருக்கிறார்கள்

காஞ்சிபுரத்தில் சரவண  பவன் ஹோட்டலின் மூன்று  கிளைகள் இயங்கி  வருகின்றன. இந்த மூன்று  கிளைகளிலும் எப்போதும் கூட்டம் நிரம்பி காணப்படும். இந்த மூன்று  கிளைகளுக்கும்  பழனியப்பன் என்பவர் மண்டல மேலாளராகப் பணியாற்றினார்.

சில மாதங்களாக, வேலையாட்களுக்கு நிர்வாகம் சரியாக ஊதியம்  வழங்கவில்லை. இதையடுத்து, பழனியப்பன் சென்னை தலைமை அலுவலகத்தில் பேசியிருக்கிறார். நிர்வாகம்  சில  சிக்கல்களில் இருப்பதால் அடுத்த மாதம் சேர்த்துக் கொடுத்துவிடலாம் என்று பழனியப்பனிடம் தெரிவித்திருக்கிறார்கள். இதை பழனியப்பன் ஊழியர்களிடம் தெரிவித்த போது  அதை  அவர்கள்  ஏற்காமல் போராட்டம் நடத்தப் போவதாகக்  கூறியிருக்கிறார்கள். இதனால், நேற்று 600 வேலையாட்களுக்கும் கொடுக்கவேண்டிய ஊதியத்தொகையில்  முன்பணமாக 5000 ரூபாய் கொடுத்திருக்கிறார்.

manager-palaniyappan

தங்களை கேட்காமல் முன்பணம் கொடுத்ததற்காக சென்னை தலைமை அலுவலகத்திலிருந்து பழனியப்பனை நேரில் வரவழைத்து முன்பணம் கொடுத்தது தொடர்பாகக் கடுமையான வார்த்தைகளால் திட்டியும் மிரட்டியும் இருக்கிறார்கள். அதிகாலையிலேயே பணிக்கு வரும் பழனியப்பன் வராததால், ஊழியர்கள் தொலைபேசியில் தொடர்புகொண்டனர். ஆனால், அவர் எடுக்கவே இல்லை. அவர்கள் வீட்டுக்குச் சென்றபோது, பழனியப்பன் மன உளைச்சலால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, காஞ்சிபுரத்தில் உள்ள மூன்று சரவண பவன் கிளை ஊழியர்களும் பணியை புறக்கணித்து, காஞ்சிபுரம் காந்தி சாலையில் உள்ள சரவண பவன் உணவகத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

பழனியப்பன் குடுமபத்திற்கு நிதியுதவி வழங்கக் கோரியும், மீதி ஊதியத் தொகையை கொடுக்குமாறும் ஹோட்டல் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.