வேலை இல்லாததால் உணவுக்காக நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய நிலைக்கு ஆளான மும்பை தாராவி மக்கள்!

 

வேலை இல்லாததால் உணவுக்காக நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய நிலைக்கு ஆளான மும்பை தாராவி மக்கள்!

வேலை இல்லாததால் உணவுக்காக நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய நிலைக்கு மும்பை தாராவி மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

மும்பை: வேலை இல்லாததால் உணவுக்காக நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய நிலைக்கு மும்பை தாராவி மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. அதனால் ஏப்ரல் 14-ஆம் தேதி வரை நாடு முழுக்க பிரதமர் மோடி ஊரடங்கை அறிவித்தார். இதனால் பல ஏழை மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சொற்ப தினக் கூலியை வைத்து ஒவ்வொரு நாளையும் போராட்டத்தோடு கடத்தி வந்த ஏழைகளுக்கு இந்த ஊரடங்கு மிகவும் அவதியை கொடுத்துள்ளது.

இந்த நிலையில், வேலை இல்லாததால் உணவுக்காக நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய நிலைக்கு மும்பை தாராவி மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். கூட்டமாக மக்கள் கூடக் கூடாது எனவும் அவ்வாறு கூடினால் கொரோனா பாதிப்பு எளிதில் பரவும் எனவும் கூறப்படுகிறது. ஆனால் பசியை போக்க வழியில்லாமல் மும்பையிலேயே அதிக தமிழர்கள் வாழும் பகுதியான தாராவியில் உணவுக்காக அலைந்து திரிந்து கொண்டு இருக்கிறார்கள். இலவசமாக உணவு வழங்கப்படும்போதெல்லாம் நீண்ட வரிசையில் இடைவெளி இல்லாமல் அவர்கள் நிற்க வேண்டிய கதிக்கு ஆளாகியுள்ளனர்.