வேலையில்லாமல் 47 கோடி பேர்….. சமூக அமைதியின்மைக்கு அதுதான் காரணம்…. எச்சரிக்கும் ஐ.நா….

 

வேலையில்லாமல் 47 கோடி பேர்….. சமூக அமைதியின்மைக்கு அதுதான் காரணம்…. எச்சரிக்கும் ஐ.நா….

உலகம் முழுவதுமாக தற்போது 47 கோடி பேர் வேலையில்லாமல் அல்லது தகுதி குறைந்த வேலை செய்கின்றனர். சமூக அமைதியின்மைக்கு இதுதான் முக்கிய காரணம் என ஐ.நா.வின் சர்வதேச தொழிலாளர் அமைப்பு எச்சரிக்கை செய்துள்ளது.

ஐ.நா.வின் சர்வதேச தொழிலாளர் அமைப்பு தனது ஆண்டு உலக வேலைவாய்ப்பு மற்றும் சமூக பார்வை அறிக்கையில் கூறியிருப்பதாவது: உலக முழுவதுமாக தற்போது 47 கோடி பேர் வேலையில்லாமல் அல்லது தகுதி குறைந்த வேலை செய்கின்றனர். நல்ல அல்லது ஒழுக்கமான வேலைகள் கிடைக்காதது தான் சமூக அமைதியின்மைக்கு முக்கிய காரணம்.

சர்வதேச தொழிலாளர் அமைப்பு

இந்த ஆண்டில் (2020) வேலையில்லை என பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை 19.05 கோடியாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 2019ம் ஆண்டில் வேலையில்லாமல் பதிவு செய்தவர்களின்  எண்ணிக்கை 18.8 கோடியாக இருந்தது. அதேசமயம், உலகம் முழுவதும் 28.5 கோடி பேர் அவர்கள் விரும்பியதை காட்டிலும் குறைவாகவே வேலை செய்பவர், புதிய வேலை தேடுவதை விட்டு விடுவார்கள் அல்லது தொழிலாளர் சந்தையில் அணுகல் இல்லாதது இருக்கும்.

வேலையில்லாதோர்

15 முதல் 24 வயது வரையிலான பிரிவில் 26.7 கோடி இளைஞர்கள் வேலைவாய்ப்பு, கல்வி அல்லது பயிற்சி இல்லாமல் உள்ளனர். மேலும் இந்த வயது பிரிவில் உள்ள பெரும்பாலான இளைஞர்கள் தரமற்ற வேலை நிலைமைகளை சகித்து கொண்டு இருக்கின்றனர். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.