வேலைக்கு செல்லும் பெண்களுக்காக விரைவில் வருகிறது “தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள்” !

 

வேலைக்கு  செல்லும் பெண்களுக்காக விரைவில் வருகிறது “தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள்” !

மாணவர்கள் கல்வி கட்டண சலுகை தொடரும் என்றும் இதற்காக ரூ.506 கோடி ஒதுக்கீடு என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

2020-2021 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையைத் தமிழக சட்டப்பேரவையில் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இதில் உயர்கல்வி துறைக்கு ரூ. 5,052 கோடி ஒதுக்கீடு, முதல் தலைமுறை மாணவர்கள் கல்வி கட்டண சலுகை தொடரும் என்றும் இதற்காக ரூ.506 கோடி ஒதுக்கீடு என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பல்வேறு துறைகளுக்கு ஏற்ப பல்வேறு புதிய திட்டங்கள்  அறிவிக்கப்பட்டுள்ளது.

TTN

இந்நிலையில் பணிபுரியும் பெண்களின் வசதிக்காகத் தமிழகத்தில் 13 இடங்களில் “தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள்” அமைக்கப்படும் என்று தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக பெண்கள் பல்வேறு ஊர்களிருந்து சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில்  வேலைக்காக வருகிறார்கள். அவர்கள் தாங்கும் விடுதிகள் பல பாதுகாப்பற்ற முறையிலும், அதிக பணம் கட்டணமாக வசூலிக்கப்பட்டும் வருகிறது. 

YY

இதனால் இதுபோன்ற பல முறைகேடுகளைத் தவிர்க்கும் நோக்கில் தமிழக பட்ஜெட்டில் மகளிர் விடுதிகள்  அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது பணிபுரியும் பெண்கள் மத்தியில் வரவேற்பை பெறும்  என்று எதிர்பார்க்கப்படுகிறது.