வேலூர் தொகுதியில் இப்படியெல்லாமா நடக்குது..? துரைமுருகன் மகனுக்கு சிக்கல்..!

 

வேலூர் தொகுதியில் இப்படியெல்லாமா நடக்குது..? துரைமுருகன் மகனுக்கு சிக்கல்..!

வேலூரில் வரும் 5ம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. ஆனால் அதற்கான அறிகுறியே தெரியவில்லை. ஆனால் வருமான வரித்துறை அதிகாரிகள் பற்றி தான் பரபரப்பாக பேச்சு நிலவுகிறது.

வேலூரில் வரும் 5ம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. ஆனால் அதற்கான அறிகுறியே தெரியவில்லை. ஆனால் வருமான வரித்துறை  அதிகாரிகள் பற்றி தான் பரபரப்பாக பேச்சு நிலவுகிறது.  நினைத்த இடங்களுக்கு போகிறார்கள். ரெய்டு அடிக்கிறார்கள். மற்றபடி சோதனை என்கிற பெயரில் கடமையே கண்ணாக போலீசாரும் தேர்தல் அதிகாரிகளும் வேலை பார்க்கிறார்கள். Edappadi

 எனினும் அதிமுகவுக்கு ஆதரவாகவே உயரதிகாரிகளின் செயல்பாடுகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. தேர்தல் நடத்தை விதிமுறை என ஒன்று இருப்பதாகவே தெரியவில்லை. எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் ஊர் பெயரை சொல்லாமல் 15 மாவட்டங்களில் 10 மாவட்டங்களில் இத்தனை கோடியில் திட்டங்கள் நடந்து வருகிறது. இந்த திட்டம் கொண்டு வரப்படும் என்று புதிது புதிதாக திட்டங்களை அறிவிக்கிறார்.shanmugam

ஆனால் தேர்தல் நடக்கும் ஊரின் பெயரை சொல்லாமல் அவர் அறிவித்தாலும் உள்ளூர் மக்களுக்கு நம்ம ஊருக்குதான் இந்த திட்டம் என்று அதிகாரிகள் ரகசியமாக வேண்டப்பட்டவர்கள் மூலம் ரகசியமாக தகவல் பரப்புகிறார்களாம். தேர்தல் கமிஷன் ஒன்று செயல்படுவதே அநேகமாக தெரியாத தொகுதியாக வேலூர் இருந்து வருகிறது என்றே மக்கள் பேசிக் கொள்கின்றனர். எடப்பாடி அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு திட்டங்களை அறிவிக்கிறார். அல்லது பக்கத்து தொகுதியில் அறிவிக்கிறார். எல்லாம் தேர்தல் நடத்தை விதிமீறல் என்றாலும் அதை அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ளவில்லை. kathir

இப்படி ஆளும் கட்சிக்கு சாதகமாக அதிகாரிகள் நடந்து கொள்வதால் துரைமுருகன் மகன் வெற்றி பெறுவதில் சிக்கல்  எழுந்துள்ளது.