வேலூருக்கு பிரியாவிடை கொடுத்து இன்று பிரிந்து செல்கிறது ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர்!

 

வேலூருக்கு  பிரியாவிடை கொடுத்து  இன்று பிரிந்து செல்கிறது  ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர்!

திருப்பத்தூரைத் தலைமையிடமாகக் கொண்டு ஒரு மாவட்டமும் உருவாக்கப்படும்.

73ஆவது சுதந்திர தின விழாவில் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேலூரை தலைமையிடமாகக் கொண்டு ஒரு மாவட்டமும், திருப்பத்தூரைத் தலைமையிடமாகக் கொண்டு ஒரு மாவட்டமும் உருவாக்கப்படும். அதேபோல் ராணிப்பேட்டையைத் தலைமையிடமாகக் கொண்டு ஒரு மாவட்டம் உருவாக்கப்படும்’ என்று அறிவித்தார். அதன்படி சமீபத்தில் இதற்கான அரசாணை  வெளியிடப்பட்டது. 

ttn

இந்நிலையில் புதிய மாவட்டமாகத் திருப்பத்தூரைத் தொடங்கி வைக்கும் விழா இன்று  நடைபெறுகிறது. அங்குள்ள  டான்பாஸ்கோ மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் விழாவில் பங்கேற்கும் முதல்வர் பழனிசாமி  35 வது மாவட்டமாக  அதை துவங்கி வைக்கிறார். இதை தொடர்ந்து ராணிப்பேட்டை கால்நடை நோய்த்தடுப்பு மருந்து நிலைய வளாகத்திற்குச் செல்லும் முதல்வர் பழனிசாமி,   36 வது மாவட்டமாக ராணிப்பேட்டையின் தொடக்கவிழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளார். இந்த விழாவில் துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்கவுள்ளார்கள். 

ttn

தமிழகத்தின் பெரிய மாவட்டமான வேலூரிலிருந்து பிரியாவிடை கொடுத்து ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் பிரிந்து செல்கிறது குறிப்பிடத்தக்கது.