வேலூரில் திமுகவை எதிர்த்து களமிறங்கும் காங்கிரஸ் நிர்வாகி! அப்ப கூட்டணி?

வேலூரில் திமுகவை எதிர்த்து களமிறங்கும் காங்கிரஸ் நிர்வாகி! அப்ப கூட்டணி?

வேலூர் மக்களவை தேர்தலில், திமுக வேட்பாளரை எதிர்த்து காங்கிரஸ் பிரமுகர் சுயேட்சையாக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளது திமுக காங்கிரஸ் கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 

வேலூர் மக்களவை தேர்தலில், திமுக வேட்பாளரை எதிர்த்து காங்கிரஸ் பிரமுகர் சுயேட்சையாக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளது திமுக காங்கிரஸ் கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 

வேலூர் மக்களவை தொகுதிக்கு அடுத்த மாதம் 5-ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 11-ம் தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கல் இன்று பிற்பகல் 3 மணியுடன் நிறைவடைந்தது. இதுவரை 50 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். நாளை வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். சட்டசபை தேர்தலில் முழு கவனம் செலுத்துவதால் வேலூர் மக்களவை தேர்தலில் அமமுக மற்றும் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க., தி.மு.க. மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகியோர் போட்டியிடுகின்றனர். 

திமுக சார்பில் கதிர் ஆனந்த் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளார். அதே வேலையில் காங்கிரஸ் பிரமுகர் வாலாஜா அசேன் என்பவரும் சுயேட்சையாக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். இவர் திமுகவில் இருந்தபோது 1989 ம் ஆண்டு, சுயேச்சையாக ராணிப்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு, சட்டமன்ற உறுப்பினராக வெற்றிப்பெற்றவர். அதன்பின் 2007 ஆம் ஆண்டு காங்கிரஸில் இணைந்தார். இவர் திமுகவை எதிர்த்து வேட்பு மனு தாக்கல் செய்திருப்பது திமுக- காங்கிரஸ் கூட்டணி வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.