வேலூரில் அதிமுக அமோக வெற்றி! | மண்ணை கவ்விய மாலை முரசு !

வேலூரில் அதிமுக அமோக வெற்றி! | மண்ணை கவ்விய மாலை முரசு !

அவ்வப்போது முன்னணி பத்திரிக்கை நிறுவனங்களான விகடன் உட்பட அவர்களது இணையதளங்களில், யாராவது பிரபலங்களை இறந்து விட்டதாக செய்திகளை வெளியிட்டு, மீடியா பரபரப்புக்காக சாகடிப்பார்கள். சமீப காலங்களாக, வருகின்ற செய்திகளை கொஞ்சமும் ஆராயாமல்,  உடனுக்குடன்  செய்திகளை வெளியிட்டு மக்களை பரபரப்புக்குள்ளேயே வைத்திருக்கும் சம்பவங்கள் தமிழ் பத்திரிக்கை உலகில் அதிகரித்துள்ளது.

சமீபத்தில் சந்திராயன் விண்கலத்தை ஏவுவதில், கால தாமதம் ஏற்பட்ட போது, தனது சோம்பலின் காரணமாக முழுதும் காத்திருக்காமல், ‘வெற்றிகரமாக சந்திராயன் ஏவப்பட்டது’ என்று செய்தி வெளியிட்டு தினமலர் பத்திரிக்கை, தனது வாசகர்களின் மத்தியில் மண்ணைக் கவ்வியது.
இன்றும் அதே போல்,வேலூர் மக்களவைத் தேர்தல் முடிவுகள் முழுவதும் வெளியாகும் வரையில் காத்திருக்காமல், யூகத்தின் அடிப்படையில் அவசரப்பட்டு, ‘ஏ.சி.சண்முகம் அமோக வெற்றி’ என்று முதல் பக்கத்திலேயே செய்தி வெளியிட்டு வாசகர்களின் அதிருப்திக்கு ஆளாகியிருக்கிறது மாலை முரசு நாளிதழ்.

malai murusu

மாலை முரசு நாளிதழின் போஸ்டர்களிலும், ‘வேலூர் தொகுதியில் அதிமுக அமோக வெற்றி’ என்று செய்தி வெளியிட்டு நகர் முழுவதும் விநியோகித்து, இவர்கள் ஆளும் கட்சிக்கும், ஏ.சி. சண்முகத்திற்கும் தங்களது விசுவாசத்தைக் காட்டியிருப்பதைப் பார்த்து, கடைகளில் மாலை நாளிதழ் வாங்க வந்திருந்த வாசகர்கள் எள்ளி நகையாடுகிறார்கள்.

வேலூர் மக்களவைத் தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஏ சி சண்முகத்தை திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 8,141 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார்.