வேலம்மாள் கல்வி குழுமம் ரூ.532 கோடி வரி ஏய்ப்பு! ஐடி ரெய்டு மூலம் வெளிவந்த ஆவணங்கள்! 

 

வேலம்மாள் கல்வி குழுமம் ரூ.532 கோடி வரி ஏய்ப்பு! ஐடி ரெய்டு மூலம் வெளிவந்த ஆவணங்கள்! 

வேலம்மாள் கல்வி குழுமத்தில் ரூ.532 கோடிக்கு கணக்கில் காட்டாத சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 

வேலம்மாள் கல்வி குழுமத்தில் ரூ.532 கோடிக்கு கணக்கில் காட்டாத சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 

வேலம்மாள் கல்விக் குழுமம் சார்பில் தமிழகத்தின் பல பகுதிகளில் பள்ளி, கல்லூரிகள், மருத்துவமனைகள் தொடங்கப்பட்டுள்ளது. மாணவர்களிடம் லட்சக் கணக்கில் கட்டணம் வசூலிக்கும் பள்ளி முறையான கணக்கு காட்டுவது இல்லை, வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளது என்று புகார் வருமான வரித்துறையினருக்கு கிடைத்தது. இதன் அடிப்படையில் வேலம்மாள் குழுமத்துக்கு சொந்தமான 50க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த 3 நாட்களாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ரூ.532 கோடி அளவுக்கு முறைகேடு செய்தது தொடர்பாக பல ஆவணங்கள் கிடைத்ததாகவும்   தற்காலிகமாக சோதனை நிறைவடைந்தாலும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர். 

It raid

வருமானவரித்துறை சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரூ.2 கோடி பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.  ஹோட்டல் தொழில் நிறுவனம் ஒன்று வெளிநாட்டில் பதுக்கிய ரூ.1000 கோடி கறுப்பு பணமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் அறக்கட்டளை என்ற பெயரில் 1990முதல் கறுப்புப் பணம் பதுக்கியதை கண்டுபிடித்தது வருமான வரித்துறை.   ஹோட்டல் நிறுவனத்தின் 13 இடங்களில் நடந்த சோதனையில் கணக்கில் வராத நகைகள், பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.