வேலம்மாளில் தொடரும் வருமான வரி சோதனை… பெற்றோருக்குத் தெரியாமல் மாணவர்களை இடம் மாற்றிய பள்ளி நிர்வாகம்!

 

வேலம்மாளில் தொடரும் வருமான வரி சோதனை… பெற்றோருக்குத் தெரியாமல் மாணவர்களை இடம் மாற்றிய பள்ளி நிர்வாகம்!

வருமான வரி சோதனை தொடர்ந்து நடைபெற்று வரும் சூழலில், தஞ்சாவூர் பள்ளியில் படித்துவந்த மாணவர்களை பெற்றோருக்கு உரிய தகவல் அளிக்காமல் வேறு இடத்திற்கு அழைத்துச் சென்று தங்க வைத்ததாக வேலம்மாள் பள்ளி நிர்வாகம் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது

வருமான வரி சோதனை தொடர்ந்து நடைபெற்று வரும் சூழலில், தஞ்சாவூர் பள்ளியில் படித்துவந்த மாணவர்களை பெற்றோருக்கு உரிய தகவல் அளிக்காமல் வேறு இடத்திற்கு அழைத்துச் சென்று தங்க வைத்ததாக வேலம்மாள் பள்ளி நிர்வாகம் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

velammal

வேலம்மாள் கல்விக் குழுமம் சார்பில் தமிழகத்தின் பல பகுதிகளில் பள்ளி, கல்லூரிகள், மருத்துவமனைகள் தொடங்கப்பட்டுள்ளது. மாணவர்களிடம் லட்சக் கணக்கில் கட்டணம் வசூலிக்கும் பள்ளி முறையான கணக்கு காட்டுவது இல்லை, வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளது என்று புகார் வருமான வரித்துறையினருக்கு கிடைத்தது. இதன் அடிப்படையில் வேலம்மாள் குழுமத்துக்கு சொந்தமான 50க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ரூ.250 கோடி அளவுக்கு முறைகேடு செய்தது தொடர்பாக பல ஆவணங்கள் கிடைத்ததாகவும் பல இடங்களில் சோதனை தொடர்ந்து நடப்பதாகவும் கூறப்பட்டது. இன்று இரண்டாவது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

velammal

வேலம்மாள் கல்வி குழுமம் போதி கேம்பஸ் என்ற பெயரில் பல பள்ளிகளை நடத்தி வருகிறது. தஞ்சாவூர் பஸ் நிலையம் அருகே போதி கேம்பஸ் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு விடுதியில் தங்கி படிக்கும் வகையில் மாணவர்கள் சேர்க்கை நடந்துள்ளது. ஆனால், விடுதி நடத்த உரிய அனுமதி பெறவில்லை என்றும், வகுப்பறையையே விடுதியாக மாற்றி பயன்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.

tax

இந்த நிலையில் அங்கு வருமான வரித்துறையினர் சோதனை நடத்திவரும் நிலையில், விடுதிக் கட்டணம் வசூலித்துவிட்டு விடுதியில் மாணவர்கள் தங்க வைக்காமல் இருப்பது பிரச்னையாகிவிடும் என்று நினைத்த நிர்வாகம் அவர்களை தஞ்சாவூரில் சில வீடுகளில் தங்கவைத்ததாக கூறப்படுகிறது. மாணவர்களின் இடமாற்றம் குறித்து பெற்றோருக்கு கூட பள்ளி நிர்வாகம் கூறவில்லை என்று சொல்லப்படுகிறது. இன்னும் என்ன என்ன மோசடிகள் அம்பலமாகுமோ என்று பெற்றோர் பயத்துடன் உள்ளனர்.