வேப்பமரத்தில் வழியும் பாலை குழந்தைகளுக்கு கொடுக்கும் கிராம மக்கள்: உண்மையில் மாரியம்மன் மகிமையா?

 

வேப்பமரத்தில் வழியும் பாலை குழந்தைகளுக்கு கொடுக்கும் கிராம மக்கள்: உண்மையில் மாரியம்மன் மகிமையா?

வேப்பமரத்தில் பால்வடிந்தால் அது மாரியம்மன் மகிமையா என்று பார்த்தால்  நிச்சயம் இல்லை.

சேலம்: வேப்பமரத்தில் பால்வடிவதைக்கண்ட மக்கள் அதை தங்கள் பிள்ளைகளுக்குக் கொடுக்கும் வினோதம் ஒன்று அரங்கேறியுள்ளது. 

neem

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே  சின்னப்பம்பட்டி என்ற கிராமம் உள்ளது. இப்பகுதியில் வசித்து வரும் ராஜா என்பவரின் வீட்டிலுள்ள வேப்பமரத்தில் தாரை  தாரையாக பால் ஊற்றி வருகிறது. கடந்த 4 நாட்களாக வற்றாமல் வழிந்து வரும் இந்த பாலை அப்பகுதி மக்கள் மாரியம்மாள் மகிமையால் பால் வழிகிறது என்று கூறி வருகின்றனர். மேலும் அந்த பாலை  நோய்கள் தீரும் என்று கூறி தங்கள் வீட்டிலுள்ள பிள்ளைகளுக்குக் கொடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. 

neem

உண்மையில் வேப்பமரத்தில் பால்வடிந்தால் அது மாரியம்மன் மகிமையா என்று பார்த்தால்  நிச்சயம் இல்லை. வேப்ப மரத்திற்கு அருகில் அதிகம் தண்ணீர் இருந்தால்,  மரத்தினுள் செல்லும் தண்ணீரின் அளவு அதிகமாகும்.அப்படி தண்ணீர் அதிகமாகும் பட்சத்தில், வேப்பமரப் பட்டைக்கு அடியிலுள்ள புளோயம் என்ற திசு பாதிக்கப்பட்டு மரப்பட்டைகள் வெடிக்க ஆரம்பிக்கும். இதைத் தொடர்ந்து மரத்திலுள்ள மாவுச்சத்து தண்ணீருடன் கலந்து வெடித்த பகுதிகளிலிருந்து பால் போல வழியத் தொடங்கும். இதை அறிந்தவர்கள் இது அறிவியல் மற்றும் இயற்கையின் விந்தை என்பதை அறிவர். அறியாதவர்  மாரியம்மாள் மகிமை என்று தங்களை தாங்களே திருப்திப்படுத்திக் கொள்வர்.