வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு..!

 

வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு..!

வேதியியலுக்கான நோபல் பரிசு மூன்று பேருக்கு வழங்கப் படப்போவதாக அறிவிக்கப் பட்டுள்ளது.

உலக அளவில் பொருளாதாரம், மருத்துவம், இயற்பியல் உள்ளிட்ட பிரிவுகளுக்கு ஆண்டு தோறும் நோபல் பரிசு அறிவிக்கப் பட்டு வருகிறது. இதனை சுவீடிஷ் நாட்டை சேர்ந்த அமைப்பு வழங்கி வருகிறது. நேற்று முன்தினம் மருத்துவத்திற்கான நோபல் பரிசு ஜீ கேலின், சர் பீட்டர் ரேட்கிளிப் , கிரேக் எல் செமன்சா ஆகிய மூவருக்கு வழங்கப் பட்டது. அதனைத் தொடர்ந்து நேற்று இயற்பியலுக்கான நோபல் பரிசு ஜேம்ஸ் பீப்லஸ், மிசெல் மேயார், டிடியர் குயல்ஸ் ஆகிய மூவருக்கு வழங்கப் பட்டது. 

Nobel prize for Chemistry

அதன் தொடர்ச்சியாக இன்று வேதியியலுக்கான நோபல் பரிசு மூன்று பேருக்கு வழங்கப் படப்போவதாக அறிவிக்கப் பட்டுள்ளது. அமெரிக்கா நாட்டை சேர்ந்த இருவர் ஜான் பி குட் எனாஃப், ஸ்டான்லி விட்டிங்ஹாம் மற்றும் ஜப்பான் நாட்டை சேர்ந்த அகிரோ யோஷினோ ஆகிய மூவரும் பகிர்ந்து கொள்கிறார்கள்.

மேலும், நகர்த்தக் கூடிய மின்னணு சாதனங்களில் பயன்படுத்தப் படும் லித்தியம்- அயர்ன் பேட்டரிகளின் மேம்படுத்தப்பட்ட கண்டுபிடிப்பிற்காக இம்மூவருக்கும் வேதியியலுக்கான இந்த ஆண்டு (2019) நோபல் பரிசு வழங்கப் படவுள்ளது.