வேண்டிய வரம் தரும் கந்த சஷ்டி விரதம்! கோலகலமாக இன்று தொடங்கியது!

வேண்டிய வரம் தரும் கந்த சஷ்டி விரதம்! கோலகலமாக இன்று தொடங்கியது!

தமிழகம் முழுவதும் தமிழ் கடவுளான முருகனுக்கு விரதமிருந்து வழிபடும் கந்த சஷ்டி விழா இன்று காலை முருகன் திருத்தலங்களில் சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது.

தமிழகம் முழுவதும் தமிழ் கடவுளான முருகனுக்கு விரதமிருந்து வழிபடும் கந்த சஷ்டி விழா இன்று காலை முருகன் திருத்தலங்களில் சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது.

கந்த சஷ்டி விழா

இன்று தொடங்கிய கந்த சஷ்டி விழா வரும் 3 ஆம் தேதி நிறைவு பெறுகிறது. கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நவம்பர் 2 ஆம் தேதி நடைபெறவுள்ளது.  சஷ்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும்’ என்பது சஷ்டியில் விரதம் இருந்தால்  தான்’ என்பதன் திரிபு தான். அதனால் இந்த சஷ்டி தினத்தில் விரதமிருந்து முருகனை வழிபட்டால் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை வரம், வீட்டின் கஷ்டங்கள் நீங்கி இன்பம் செழிக்கும். 

கந்த சஷ்டி விழா

தமிழகத்தில் திருச்செந்தூர், பழமுதிர்சோலை, பழனி, சுவாமிமலை என்று முருகனின் அறுபடை வீடுகளிலும், சென்னை வடபழனி ஆண்டவர் திருக்கோவிலிலும் கந்த சஷ்டியை முன்னிட்டு முருகனுக்கு சந்தனக்காப்பு ராஜ அலங்காரம் செய்யபட்டிருந்ததை அதிகாலை முதலே பக்தர்கள் தரிசித்தனர்.