வேண்டாம், இதுவரைக்கும் யாரும் என்னை தொட்டதில்லை – நாயுடு சவால்!வேண்டாம், இதுவரைக்கும் யாரும் என்னை தொட்டதில்லை – நாயுடு சவால்!

 

வேண்டாம், இதுவரைக்கும் யாரும் என்னை தொட்டதில்லை – நாயுடு சவால்!வேண்டாம், இதுவரைக்கும் யாரும் என்னை தொட்டதில்லை – நாயுடு சவால்!

தமக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை குறைத்து, தமது வீட்டை இடித்து, தமக்கு பல்வேறு வகைகளில் ஆபத்து ஏற்பட ஏதுவாக ஜெகன் நடந்துகொள்வதாகவும், தமது உயிருக்கு ஏதேனும் அசம்பாவதிஅம் நேர்ந்தால், ஆந்திராவே அமளிதுமளியாகும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆந்திராவின் பர்ச்சூர் தொகுதி, ருத்ரம்மாபுரத்தில், தெலுங்கு தேசம் கட்சி பெண் நிர்வாகி ஒருவர் தற்கொலை செய்துகொன்டார். முன்னதாக, ஆட்சியில் இருக்கும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் நிர்வாகிகள் அவரைத் தாக்கியிருந்தனர். தற்கொலை செய்துகொண்ட நிர்வாகியின் வீட்டுக்கு நேரில் சென்ற முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, பெண் நிர்வாகியின் குடும்பத்தினருக்கு ஆறுதலோடு  ஐந்து லட்சம் ரூபாய்க்கான காசோலையையும் வழங்கினார்.

Jagan Mohan - Chandra Babu

அதன்பின் பொதுமக்கள் மத்தியில் பேசிய நாயுடு, ஜெகன் மோகன் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு பராமரிக்கப்படுவது விமர்சனம் செய்தார். மேலும், தமது கட்சி நிர்வாகி தாக்கப்பட்டது குறித்து முதல்வர் ஜெகன் இதுவரை கண்டனம் தெரிவிக்காததற்கு கண்டனமும் தெரிவித்தார். தமக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை குறைத்து, தமது வீட்டை இடித்து, தமக்கு பல்வேறு வகைகளில் ஆபத்து ஏற்பட ஏதுவாக ஜெகன் நடந்துகொள்வதாகவும், தமது உயிருக்கு ஏதேனும் அசம்பாவதிஅம் நேர்ந்தால், ஆந்திராவே அமளிதுமளியாகும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.