வேகமாக பரவும் டெங்கு: 5 வயது சிறுமி பரிதாப பலி!

 

வேகமாக பரவும் டெங்கு: 5 வயது சிறுமி பரிதாப பலி!

தொடர்ந்து பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் உயிரிழப்புகளைத் தடுக்க முடியவில்லை. 

தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ளதால் பலமாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகள் மற்றும் பள்ளமாக  இடங்களில் நீர் தேங்கி  கொசுக்களின்  உற்பத்தி அதிகரித்துள்ளது.இதனால் ஏற்பட்டுள்ள டெங்கு காய்ச்சலுக்கு வேலூர், சென்னை உள்ளிட்ட  பல  மாவட்டங்களில் உயிரிழப்புக்கள் ஏற்பட்டு வருகிறது.  டெங்குகாய்ச்சலைத் தடுப்பதற்குத் தமிழக அரசும் மாநகராட்சியும் தொடர்ந்து பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் உயிரிழப்புகளைத் தடுக்க முடியவில்லை. 

ttn

இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே காரியாபட்டி அரசகுளத்தை சேர்ந்த அம்மையப்பன். இவரின் மகள் 5 வயதான  சஞ்சனா. சிறுமி சஞ்சனா கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல் காரணமாக மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிறுமிக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தது.

ttn

இதை தொடர்ந்து சிறுமிக்கு அங்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும்  சிறுமி சஞ்சனா சிகிச்சை பலனின்றி பலியானார்.

ttn

இதையடுத்து சிறுமியின் உடல் அவரின் சொந்த ஊரான அரசகுளத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. 5 வயது சிறுமி டெங்கு காய்ச்சலால் பலியான சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.