வேகபந்துவீச்சில் மிரண்ட வங்கதேசம்.. இன்னிங்ஸ் வெற்றிக்கு திட்டமிடும் இந்தியா.. உணவு இடைவேளையில் வங்கதேசம் 60/4!

வேகபந்துவீச்சில் மிரண்ட வங்கதேசம்.. இன்னிங்ஸ் வெற்றிக்கு திட்டமிடும் இந்தியா.. உணவு இடைவேளையில் வங்கதேசம் 60/4!

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சை சற்றும் சமாளிக்க இயலாமல் உணவு இடைவேளைக்கு முன்பாக 4 விக்கெடுகளை இழந்து பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது வங்கதேச அணி.

இந்தியா வங்கதேச அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது இப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் வங்கதேச அணி 150 ரன்களுக்கு ஆட்டமிழந்தது இதற்காக முதல் இன்னிங்சை தொடர்ந்த இந்திய அணிக்கு புஜாரா, ரஹானே, ஜடேஜா அரைசதம் கண்டனர். மயன்க் அகர்வால் 243 ரன்கள் அடித்து அசத்தினார்.

ind vs ban

இரண்டாம் நாள் முடிவில், இந்தியா முதல் இன்னிங்சில் 493/6 என இருந்தது. இதன் மூலம் முதல் இன்னிங்சில் 343 ரன்கள் முன்னிலை பெற்றது. இதனையடுத்து அன்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தில் சிறிது நேரத்திற்கு முன்பாக திடீரென இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தார்.

மீண்டும் இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த வங்கதேச அணிக்கு துவக்க வீரர்கள் இருவரும் முதல் இன்னிங்சை போலவே தலா 6 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த கேப்டன் மொமினுள் 7 ரன்களுக்கு வெளியேறினார். 

ind vs ban

உணவு இடைவேளைக்கு முன்பாக 4 விக்கெட் இழப்பிற்கு 60 ரன்கள் எடுத்து பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது வங்கதேச அணி. இந்திய அணியை விட இன்னும் 283 ரன்கள் பின்தங்கி இருக்கிறது. 6 விக்கெட்டுகள் எடுத்தால் இன்னிங்ஸ் வெற்றி பெறலாம் என்ற முனைப்பில் இந்திய அணி உள்ளது குறிப்பிடத்தக்கது.