வெஸ்ட் இண்டீஸ் தொடர்: போட்டி அட்டவணை அறிவிப்பு – சென்னையில் டி20 போட்டி !

 

வெஸ்ட் இண்டீஸ் தொடர்: போட்டி அட்டவணை அறிவிப்பு – சென்னையில் டி20 போட்டி !

மும்பை: மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாட உள்ளது. இதன் போட்டி அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. அதனைத் தொடர்ந்து ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. அதற்கு பிறகு வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்து மூன்று வகை கிரிக்கெட்டிலும் விளையாடுகிறது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே செய்யப்பட்டிருந்தது.

 

இந்நிலையில், இவ்விரு அணிகளும் மோதும் போட்டிகளுக்கான அட்டவணையை இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் இரண்டு டெஸ்ட் போட்டிகள், 5 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் மேற்கிந்தியத்தீவுகள் அணி இந்தியாவுடன் விளையாடுகிறது.

இந்தியா – மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கு இடையிலான போட்டிகள் விவரம்:-

டெஸ்ட் தொடர்

முதல் டெஸ்ட்: அக்டோபர் 4-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை – ராஜ்கோட்

இரண்டாவது டெஸ்ட் – அக்டோபர் 12-ந்தேதி முதல 16-ந்தேதி வரை – ஐதராபாத்

ஒருநாள் கிரிக்கெட் தொடர்

முதல் ஒருநாள் போட்டி – அக்டோபர் 21-ந்தேதி – கவுகாத்தி

2-வது ஒருநாள் போட்டி – அக்டோபர் 24-ந்தேதி – இந்தூர்

3-வது ஒருநாள் போட்டி – அக்டோபர் 27-ந்தேதி – புனே

4-வது ஒருநாள் போட்டி – அக்டோபர் 29-ந்தேதி – மும்பை

5-வது ஒருநாள் போட்டி – நவம்பர் 1-ந்தேதி – திருவனந்த புரம்

டி20 கிரிக்கெட் தொடர்

முதல் டி20 போட்டி – நவம்பர் 4-ந்தேதி – கொல்கத்தா

2-வது டி20 போட்டி – நவம்பர் 6-ந்தேதி – லக்னோ

3-வது டி20 போட்டி – நவம்பர் 11-ந்தேதி – சென்னை

நவம்பர்  மாதம் 11-ஆம் தேதி இரு அணிகளும் சென்னையில் டி20 போட்டியில் விளையாடுகிறது. டெஸ்ட் போட்டி அடுத்த மாதம் 4-ஆம் தேதி தொடங்குகிறது.