வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியில் மீண்டும் ஒரு வீரர் சேர்ப்பு!!

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியில் மீண்டும் ஒரு வீரர் சேர்ப்பு!!

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. இதில் மேலும் ஒரு வீரரை பிசிசிஐ இன்று சேர்த்துள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியில் மீண்டும் ஒரு வீரர் சேர்ப்பு!!

உலக கோப்பை தொடருக்குப் பிறகு இந்திய அணி மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. ஏற்கனவே மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என இந்திய அணி வென்றது. அதேபோல் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றது. 

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. இதில் மேலும் ஒரு வீரரை பிசிசிஐ இன்று சேர்த்துள்ளது.

உலக கோப்பை தொடருக்குப் பிறகு இந்திய அணி மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. ஏற்கனவே மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என இந்திய அணி வென்றது. அதேபோல் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றது. 

இதைத் தொடர்ந்து இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி ஆட இருக்கிறது. இதற்காக இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது இதில் புதிதாக இளம் வேகப்பந்து வீச்சாளரான நவ்தீப் சைனியை பிசிசிஐ இணைத்துள்ளது. 

போட்டியை ஆடும் 11 வீரர்களில் ஒருவராக சைனி ஆடமாட்டார். பதிலாக, வலைப்பயிற்சியில் இந்திய வீரர்கள் ஈடுபடுகையில் அவர்களுக்கு பந்துவீச இவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பதை பிசிசிஐ தெளிவாக எடுத்துரைத்தது. 

அடுத்தடுத்த டெஸ்ட் தொடர்களில் நவ்தீப் சைனியை எடுக்கும் எண்ணத்திலும் பிசிசிஐ தேர்வுக்குழு இருக்கின்றது என்பது இதிலிருந்து தெளிவாக தெரிகிறது.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சைனி சிறப்பாக செயல்பட்டதால் உலக கோப்பை அணியின் வலைப் பயிற்சி பந்துவீச்சாளராக இடம்பெற்றார். அதன்பிறகு தற்போது மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரிலும் சர்வதேச இந்திய அணியில் அறிமுகமாகியிருக்கிறார். நாளுக்கு நாள் இவரின் செயல்பாடும் பந்துவீச்சு வேகமும் அதிகரித்துக் கொண்டே வருவதால் இந்த முடிவை பிசிசிஐ எடுத்திருக்கிறது என தெரியவந்துள்ளது.