‘வெள்ளை பேண்ட்,சட்டை,கேப்’.. அமைச்சர் பந்து வீச, கிரிக்கெட் வீரராக மாறிய முதல்வர் !

 

‘வெள்ளை பேண்ட்,சட்டை,கேப்’.. அமைச்சர் பந்து வீச, கிரிக்கெட் வீரராக மாறிய முதல்வர் !

இன்று காலை ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் சென்னை மெரினா கடற்கரை கண்ணகி சிலை எதிரே உள்ள மைதானத்தில் நடைபெற்றது.

இன்று காலை ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் சென்னை மெரினா கடற்கரை கண்ணகி சிலை எதிரே உள்ள மைதானத்தில் நடைபெற்றது. அந்த போட்டியைத் தொடக்கி வைக்க முதல்வருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. வழக்கமாக வெள்ளை வேட்டி, சட்டை அணிந்து வரும் எடப்பாடி இன்று வெள்ளை பேண்ட், சட்டை வெள்ளை தொப்பி போட்டுக் கொண்டு கிரிக்கெட்டர் போல வந்திருந்தார். அவரை அனைவரும் வியப்புடன் பார்த்தனர். 

ttn

அந்த மைதானத்தில்  தலைமைச் செயலாளர் சண்முகம், நிஜாமுதீன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும், டி.ஜி.பி. திரிபாதி, சேசாயி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட ஐ.பி.எஸ் அதிகாரிகளும் வெள்ளை பேண்ட் சட்டை அணிந்து கொண்டு விளையாட்டு வீரர்களைப் போலக் களத்தில் விளையாடுவதற்காக நின்று கொண்டிருந்தனர். 

ttn

அங்குச் சென்ற முதல் விளையாட்டுப் போட்டிகளைப் பற்றி வாழ்த்திப் பேசிவிட்டு, விளையாட்டுப் போட்டிகளைத் துவக்கி வைத்தார். அதன் பின்னர், அமைச்சர் ஜெயக்குமார், டி.ஜி.பி. திரிபாதி பந்து வீச  எடப்பாடி பழனிசாமி கிரிக்கெட் விளையாடினார். மிகவும் நன்றாகவே விளையாடினர்.

ttn

அவர் ஒவ்வொரு முறை மட்டையால் பந்தை விளாசும் போதும், அங்கிருந்தவர்கள் அவரை கைத்தடி உற்சாகப் படுத்தினர். அதனையடுத்து, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் தொடங்கின.