‘வெள்ளை காந்தாரி’…இத்தனை வகையா மீன்சாப்பிட நீங்க கொச்சிக்குதான் போகணும்..! 

 

‘வெள்ளை காந்தாரி’…இத்தனை வகையா மீன்சாப்பிட நீங்க கொச்சிக்குதான் போகணும்..! 

கொச்சி பொன்னானி மங்கலம், களமசேரி சாலையிலுள்ள டோல்கேட்டுக்கு அருகில் இருக்கிறது இந்த உணவகம். காலை உணவு சாதாரணமாக கேரளத்தில் எங்கும் கிடைக்கும், அப்பம்,வெள்ளையப்பம், சப்பாத்தி, தோசை, இடியாப்பம்தான் இங்கேயும். கூட மூன்றுவகையான தொடுகறிகள் மட்டும் உண்டு.

கொச்சி பொன்னானி மங்கலம், களமசேரி சாலையிலுள்ள டோல்கேட்டுக்கு அருகில் இருக்கிறது இந்த உணவகம். காலை உணவு சாதாரணமாக கேரளத்தில் எங்கும் கிடைக்கும், அப்பம்,வெள்ளையப்பம், சப்பாத்தி, தோசை, இடியாப்பம்தான் இங்கேயும். கூட மூன்றுவகையான தொடுகறிகள் மட்டும் உண்டு.

vella-kanthari

பகல் உணவுதான் ரகளை, இங்கே நீங்கள் எதிர்பார்த்து வருகிற கடலுணவுகள் மட்டுமல்ல, எதிர் பார்க்காத, இதுவரை கேள்விப்பட்டிராத எத்தனையோ வகையான மீன் உணவுகள் வெள்ளகாந்தாரியில் கிடைக்கும். சாப்பாடு ஐம்பது ரூபாய்தான். சிக்கன், பீஃப் போன்றவை எப்போதும் ஒரே விலைதான்.மீன் உட்பட்ட கடலுணவுகளில் மட்டும் அன்றைய சந்தை விலையைப் பொறுத்து மாற்றங்கள் இருக்கும்.அந்த விலைப்பட்டியலும் வாசலில் வைக்கப்பட்டு இருக்கும்.

நீங்கள் எதைச் சாப்பிட்டாலும் பில் 150 ஐ தாண்டாது.மீன்முட்டை பொரியல் இந்த உணவகத்தின் பிராண்ட் அம்பாசிடர்,வருகிற கூட்டத்தில் பாதி அதைத்தான் கேட்கிறது. கூடவே மீன் பிற, கக்கதோறன்,கல்லுமக்கா உலர்த்தியது,மீன் முளகூட்டல்,நண்டு,கொஞ்சு,கடம்பா அனைத்தும் உண்டு.இங்கே கிடைக்கும் இன்னொரு ஸ்பெஷல் முரிங்ககறி எனப்படும் முருங்கைக்காய் சேர்த்த மீன்கறி!.அயிலா, செம்பல்லி,ஏரி,தலமீன்,சாளை,முள்ளன்,பாறை,சூரை,கவல, சுதும்பு,பூமீன்,வவ்வா என்று குறைந்தது பத்து வகை மீன்கள் எப்போதும் குளம்பில் கொதித்துக்கொண்டு இருக்கும்.

vella-kanthari-89078

கறிமீன் மீன்கறி முதல்,கெளுத்தி,கொடுவாவரை செமி கிரேவி ஐட்டங்கள் தனி.
இதுதவிர மீன் பொள்ளிச்சது என்று எடுத்துக்கொண்டால் அதிலும் கறிமீன் மிதல் சாளை வரை சைஸ் வாரியாக ஏழெட்டு ரகம் இருக்கிறது. இப்போது கேரளத்து உணவகங்களில் அருகி வரும் ‘ கிழி’ வகைகளும் உண்டு.மீன் தலைக்கறியும் கிடைக்கும். சோறு என்று ஆர்டர் செய்தால் அத்துடன் மீன் குழம்பு,சாம்பார் ரசம், மோர் இரண்டு பொரியல்கள் தருகிறார்கள். நாம் நமது விருப்பம்போல பக்கவாத்தியங்கள் ஆர்டர் செய்து கொள்ளலாம்.

 

கூடவே புரோட்டா,கப்பக்கிளங்கும் கிடைக்கும்.கொச்சியில் மிகச்சிறந்த பீஃப் கிடைக்கும் இடங்களில் இந்த வெள்ளக்காந்தாரியும் ஒன்று.இங்கே உணவக உரிமையாளர் ஜான் குடும்பத்தை விட்டால் ஒரே ஒரு மாஸ்ட்டர் மட்டுமே ஆண். மற்றபடி சமைப்பது பரிமாறுவது எல்லாம் பெண்களே.உணவகத்திற்கு ஞாயிறு விடுமுறை.இந்த உணவகத்தின் இன்னொரு சிறப்பு மாலை 6 லிருந்து 7 வரை இங்கு கடைபிடிக்கப்படும் ‘ ஹேப்பி ஹவர்’!.இரவில் உணவகம் இயங்காதென்பதால் அன்றைய தயாரிப்புகள் அனைத்தையும் மிச்சமில்லாமல் தீர்க்கத்தான் இந்த ஏற்பாடு.

ஆறு மணிக்கு மேல் அன்று தயாரிக்கப்பட்ட பண்டங்கள் அனைத்தையும் தள்ளுபடி விலையில் அள்ளித்தந்து காலி செய்கிறார்கள். அங்கே சாப்பிட முடியாது,பார்சல் மட்டுமே.புரோட்டாவும் பீஃபும் உண்டு.
ஞாயிறு வெள்ளைகாந்தாரிக்கு விடுமுறை.