வெள்ளை உடையில் ரத்த காயங்களுடன் பேய்: பிராங்ஷோ செய்த இளைஞர்கள் கைது!

 

வெள்ளை உடையில் ரத்த காயங்களுடன் பேய்: பிராங்ஷோ செய்த இளைஞர்கள் கைது!

தலைவிரி கோலத்தில் அவ்வழியாகச் சென்றவர்களைப் பயமுறுத்தியுள்ளனர். அதில் சிலர் இவர்களை விரட்டி கொண்டும் வந்துள்ளனர்.

பெங்களூரை சேர்ந்த  மாணவர்கள் சிலர் கூக்ளி பீடியா  என்ற யூடியூப்  சேனலை நடத்தி வந்துள்ளனர். சேனலின் சப்ஸ்கிரைபரை  உயர்த்த திட்டமிட்ட அவர்கள் இரவு நேரத்தில் பேய் போல வேடமிட்டு சாலையில் நின்று கொண்டு பொதுமக்களை அச்சுறுத்தலாம் என்று முடிவெடுத்துள்ளனர். 

ttn

இதனால், ஞாயிற்றுக்கிழமை இரவு, பெங்களூரு யஷ்வந்தபுரம் அருகே ஷெரீப் நகர் பகுதியில் நள்ளிரவில் பிராங்ஷோ நடத்த திட்டமிட்ட அவர்கள், வெள்ளைநிற ஆடையில், ரத்த கறைகள் படிந்தது போல, தலைவிரி கோலத்தில் அவ்வழியாகச் சென்றவர்களைப் பயமுறுத்தியுள்ளனர். அதில் சிலர் இவர்களை விரட்டி கொண்டும் வந்துள்ளனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. 

 

சம்பவ இடத்துக்கு வந்த போலீசாரை  கண்டதும் பேய் வேடமிட்டவர் போலீசாரை விரட்டினார். இதனால் கடுப்பான போலீசார்,அவர்களை வளைத்து பிடித்தனர். அப்போது மறைவாக கேமிரா கொண்டு படமெடுத்துக் கொண்டிருந்த சிலர் அங்கே ஓடிவந்து யூடியூப்புக்காக வீடியோ எடுக்கிறோம் என்று சொல்ல, அவர்களை போலீசார் விசாரணைக்காகக் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

ttn

விசாரணையில்   ஜான் மல்லிக், நவீத்,சஜில் முகமது,  ஷாகிப், சையத் நபீல், யூசுப் அகமது, முகமது ஆயுப் ஆகிய ஏழு பேரும் கல்லூரி மாணவர்கள் என்பது தெரியவந்தது. அனுமதி இல்லாமல் பிராங்ஷோ செய்த குற்றத்திற்காக அவர்களை போலீசார் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.