வெள்ளை இதயம், ஹிந்து கோவில், பாராசூட் என பல்வேறு புதிய 2019 எமோஜிக்கள் அப்டேட்!

 

வெள்ளை இதயம், ஹிந்து கோவில், பாராசூட் என பல்வேறு புதிய 2019 எமோஜிக்கள் அப்டேட்!

2019-ஆம் ஆண்டுக்கான வெள்ளை இதயம், ஹிந்து கோவில், பாராசூட் என பல்வேறு புதிய எமோஜிக்கள் விரைவில் வெளியாக உள்ளன.

டெல்லி: 2019-ஆம் ஆண்டுக்கான வெள்ளை இதயம், ஹிந்து கோவில், பாராசூட் என பல்வேறு புதிய எமோஜிக்கள் விரைவில் வெளியாக உள்ளன.

ஸ்மார்ட்போன்கள், சமூக வலைதளங்கள், வாட்ஸ்அப் சாட்டிங் என மற்றவர்களுடன் நாம் உரையாடும்போது அதை இன்னும் சுவாரஸ்யமாக மாற்றுபவை தான் எமோஜிக்கள். அதாவது குட்டி குட்டியான அனிமேஷன் பொம்மைகள். உலகம் முழுக்க பயன்படுத்தப்படும் எமோஜிக்களின் பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளித்து அதை ஓழுங்குபடுத்துவது ‘யுனிகோட் கான்சோர்டியம்எனும் நிறுவனம் ஆகும். இந்நிலையில், யுனிகோட் எமோஜி 12.0 அப்டேட்டில் புதிதாக 230 எமோஜிக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதாவது மொத்தம் 59 புதிய எமோஜிக்களும் அதன் வெவ்வேறு வண்ணங்கள், அமைப்புகளை பொறுத்து மொத்தம் 230 எமோஜிக்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

ஹிந்து கோவில், வெள்ளை இதயம், சேலை, ஆட்டோ ரிக்க்ஷா, விளக்கு, காது கேளாதவர், பாராசூட், சொட்டு இரத்தம், வளையத்தை கொண்ட கோள், பட்டம், வெங்காயம் மற்றும் உதவி நாய் போன்ற பல புதிய எமோஜிக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்தாண்டு செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்திற்குள் பயன்பாட்டிற்கு இந்த புதிய எமோஜிக்கள் வெளியாகும் என தெரிகிறது. 2014-ஆம் ஆண்டுக்கு பிறகு பெரிய எமோஜி அப்டேட் இது என்பது குறிப்பிடத்தக்கது.