வெள்ளையா இருக்குறவன் பொய் சொல்ல மாட்டான்னு நெனைச்சி கமலுக்கு ஓட்டு போட்டுருக்காங்க : தேர்தல் முடிவால் கடுப்பான சீமான்!?

 

வெள்ளையா இருக்குறவன்  பொய் சொல்ல மாட்டான்னு நெனைச்சி கமலுக்கு ஓட்டு போட்டுருக்காங்க : தேர்தல் முடிவால் கடுப்பான சீமான்!?

வெள்ளையாக இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான் என்ற நம்பிக்கையில் மக்கள் கமலுக்கு வாக்களித்துள்ளார்கள் என்று சீமான் தெரிவித்துள்ளார். 

வெள்ளையாக இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான் என்ற நம்பிக்கையில் மக்கள் கமலுக்கு வாக்களித்துள்ளார்கள் என்று சீமான் தெரிவித்துள்ளார். 

kamal

மக்களவை தேர்தலில் திமுக அதிமுக கட்சிகளுக்கு அடுத்தபடியாக, மக்களின் கவனம் சில இதர கட்சிகள் மீதும் சென்றுள்ளது. உதாரணமாக நாம் தமிழர் கட்சி  மற்றும் மக்கள் நீதி மய்யம். இந்த அரண்டு கட்சிகளுமே கணிசமான வாக்குகள் வாங்கியதில்  மக்கள் நீதி மய்யம் 11 இடங்களில் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. நாம் தமிழர் கட்சி ஏழு இடங்களில் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது.

seeman

இதில் குறிப்பாக வடசென்னை, கோயம்புத்தூர், திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், நாகப்பட்டினம், சிவகங்கை, ஸ்ரீபெரும்புதூர், தென்காசி, தஞ்சாவூர், திருவள்ளூர், தூத்துக்குடி, திருச்சி, திருநெல்வேலி, விருதுநகர் ஆகிய 15 தொகுதிகளில் 50 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளது நாம் தமிழர் கட்சி.இருப்பினும் களத்தில் முதல்முறையாக நின்ற போதே கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் சீமான் வேகத்துக்கு ஈடுகொடுத்து வந்துள்ளார் என்பதே ஆச்சரியமான ஒன்று. 

seeman

இந்நிலையில் தேர்தல் முடிவுகளுக்கு பின் பிரபல வார இதழ் ஒன்றிற்கு பேட்டியளித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கமல் குறித்து பேசியுள்ளார். அதில், ‘ 50 ஆண்டுகள் நடித்து வரும் அவருக்கு என்னை விட மக்களிடம் அறிமுகம் உள்ளது. அது மட்டுமின்றி அவர் வெள்ளையாக இருக்கிறார். வெள்ளையாக இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான் என்ற நம்பிக்கையில் மக்கள் அவருக்கு வாக்களித்துள்ளார்கள். மக்களுக்காக உழைக்கும் எங்களை அழுக்காக பார்க்கிறார்கள்.  அடுத்த தேர்தலில் 117 இடங்களை ஆண்களுக்கும், 117 இடங்களைப் பெண்களுக்கும் பிரித்துக் கொடுத்து  தனித்துப் போட்டியிடுவோம்.  ரஜினி அரசியலுக்கு வரும் போது, இதை விட பெரிய நெருக்கடி அவருக்கு இருக்கும்’ என்றார்.