வெள்ளிக்கிழமைக்குள் மகாராஷ்டிரா முதல்வராக பதவியேற்கிறார் தேவேந்திர பட்னாவிஸ்! சிவ சேனாவுக்கு அல்வா கொடுத்த பா.ஜ.க.

 

வெள்ளிக்கிழமைக்குள் மகாராஷ்டிரா முதல்வராக பதவியேற்கிறார் தேவேந்திர பட்னாவிஸ்! சிவ சேனாவுக்கு அல்வா கொடுத்த பா.ஜ.க.

சிவ சேனாவுடன் பிரச்னை இருந்தாலும், நாளை அல்லது நாளை மறுநாளுக்குள் பா.ஜ.க. முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மகாராஷ்டிரா முதல்வராக பதவியேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மகாராஷ்டிராவில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க.-சிவ சேனா கூட்டணி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றியது. பா.ஜ.க. 105 இடங்களிலும், சிவ சேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றது. இதனையடுத்து பா.ஜ.க. முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தொடர்ந்து 2வது முறையாக ஆட்சி அமைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதல்வர் பதவியை சரிபாதி காலம் எங்களுக்கு விட்டு தர வேண்டும் என சிவ சேனா வலியுறுத்தி வருகிறது.

பா.ஜ.க.

மேலும் எழுத்துப்பூர்வமாக வாக்குறுதி கொடுத்தால் மட்டுமே பா.ஜ.க. ஆட்சி அமைக்க ஆதரவு தருவோம் என உத்தவ் தாக்கரே உறுதியாக கூறினார். ஆனால் குறைந்த இடங்களே வென்ற சிவ சேனாவுக்கு முதல்வர் பதவியை விட்டு தருவதில் பா.ஜ.க. விருப்பம் இல்லை. அதேசமயம் சிவ சேனா தயவு இல்லாமல் ஆட்சியையும் பிடிக்க முடியாத நிலையில் பா.ஜ.க. உள்ளது. சிவ சேனா தலைவர் உத்தவ் தாக்கரேவுடன் பா.ஜ.க. தலைவர் அமித் ஷா பேசி இந்த விவகாரத்தில் ஒரு முடிவு எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிவ சேனா

இந்நிலையில், சிவ சேனாவுடன் பிரச்னை ஒரு பக்கம் ஒடினாலும், அக்டோபர் 31 அல்லது நவம்பர் 1ம் தேதியில் தொடர்ந்து 2வது முறையாக மகாராஷ்டிரா முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ்  பதவி ஏற்பார். மேலும், சிவ சேனாவும் கூட்டணி அரசில் இணையும் மற்றும் முதல்வர் பதவி மற்றும் அமைச்சரவையில் சரிபாதி இடங்கள் உள்ளிட்ட கோரிக்கைகளை கேட்காது என பா.ஜ.க. நம்புகிறது.