வெள்ளப்பெருக்கால் குற்றாலத்தில் குளிக்கத் தடை

வெள்ளப்பெருக்கால் குற்றாலத்தில் குளிக்கத் தடை

இன்று கார்த்திகை மாதப் பிறப்பையொட்டி சபரிமலையில் பக்தர்கள் குவிந்தனர். தமிழகம் முழுவதும் இருந்து கார்த்திகை மாதத்தையொட்டி சபரிமலைக்கு பக்தர்கள் செல்லத் துவங்கியுள்ளனர். மேலும் இன்று விடுமுறை தினமாகவும் இருப்பதால் குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகளும், ஐய்யப்ப பக்தர்களும் நூற்றுக்கணக்கில் குவிந்தனர். 

kuttralam

குற்றாலத்தில் மெயின் அருவியில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், ஆர்பரித்துக் கொட்டும் அருவியில் ஆசையாசையாய் குளிக்க வந்த சுற்றுலாப்பயணிகளும், ஐயப்ப பக்தர்களும் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். குற்றாலத்தில் மெயில்  அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தாலும், பழையகுற்றாலம், புலி அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் சுற்றுலாப்பயணிகள் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.