வெள்ளக்காடாக மாறிய மும்பை: ரெட் அலர்ட் எச்சரிக்கையால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

 

வெள்ளக்காடாக மாறிய மும்பை: ரெட் அலர்ட் எச்சரிக்கையால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

கனமழையால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ரயில் தண்டவாளங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது.

மும்பை: மும்பையில் பெய்து வரும் கனமழையால் அந்நகரமே  வெள்ளக்காடாய் மிதந்துள்ளது. 

பருவமழை தீவிரமான நிலையில் மும்பை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மிக மிக பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் புகுந்தது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாத சூழலில் உள்ளனர். கனமழையால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ரயில் தண்டவாளங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது. விமான நிலையத்திலும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. 

mumbai

இந்த நிலையில் மும்பையில் இன்றும் மிகக் கனமழை பெய்யும் என்பதால் ரெட்அலர்ட் எச்சரிக்கை  விடுக்கப்பட்டுள்ளது. மேலும் மும்பை, தானே, கொங்கன், புனே உள்படப் பல மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

rain

குறிப்பாக   நேற்று இரவு மும்பையில் 3 மணிநேரத்தில் 50 மில்லி மீட்டர் மழை பெய்தது.இதை விட அதிகமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.