வெள்ளக்காடாக மாறிய கேரளா: தொடரும் கனமழையால் ரெட் அலர்ட்!

 

வெள்ளக்காடாக மாறிய கேரளா:  தொடரும் கனமழையால் ரெட் அலர்ட்!

கேரளாவில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாகக் கேரள மாநிலம் முழுவதும் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கிறது

கேரளா: கேரளாவில் பெய்து வரும்  கனமழையால் காசர்கோடு மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாகக் கேரள மாநிலம் முழுவதும் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கிறது. மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

kerala

சிலரோ வீடுகளை சுற்றி வெள்ளநீர் சூழ்ந்து கொண்டதால் வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால் மீட்புப் படையினர் படகுகள் மூலம் மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கனமழை காரணமாகப் பம்பலா அணை, மலக்கன்காரா அணையும் நேற்று திறக்கப்பட்ட நிலையில், இடுக்கி மாவட்டத்தில் உள்ள  கல்லார்குட்டி அணையும் இன்று திறக்கப்பட்டது. 

rain

இந்நிலையில்  அடுத்த 2 நாட்களுக்குக் கனமழை பெய்யும்  இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பை அடுத்து  காசர்கோடு மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இடுக்கி, கண்ணூர், கோழிக்கோடு, மலப்புரம், வயநாடு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கோழிக்கோடு மற்றும் வயநாடு மாவட்டங்களுக்கு நாளை மற்றும் நாளை மறுநாளும் ரெட்அலர்ட்டும், மலப்புரம், கண்ணூர் மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்சு அலர்ட்டும்  விடுக்கப்பட்டுள்ளது.

kerala

சபரிமலை அமைந்துள்ள  பத்தனம்திட்டா பகுதியிலும் கனமழை காரணமாகக் கோவிலுக்கு வரும் பக்தர்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். மேலும் பம்பை ஆற்றில் குளிக்கும் போது  பக்தர்கள் கவனமாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.