வெளுத்து வாங்கிய மழை!தொடர்ந்து 4 மாதமாக குறைந்தது மின்சார தேவை!

 

வெளுத்து வாங்கிய மழை!தொடர்ந்து 4 மாதமாக குறைந்தது மின்சார தேவை!

தொடர்ந்து நான்காது மாதமாக கடந்த நவம்பரிலும் நாட்டில் மின்சார தேவை குறைந்தது. குளிர்காலம் முன் கூட்டியே தொடங்கியது மற்றும் அதிக மழையை இதற்கு காரணம் என மத்திய மின்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆசியாவின் 3வது  பெரிய பொருளாதாரத்தை கொண்டது நம் நாடு. கடந்த சில மாதங்களாக நம் நாட்டில் மின்சார தேவை குறைந்து வருகிறது. சமீபகாலமாக நாட்டின் பல பகுதிகளில் விடாது கனமழை பெய்து வருகிறது.  மேலும் குளிர்காலம் முன்கூட்டியே தொடங்கி விட்டது. இதனால் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் ஏர்கண்டிஷனர் பயன்பாடு குறைந்து விட்டது. இதனால் பெரிய அளவில் மின்சார தேவை குறைந்தது. அதேசமயம் ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சியை தடுத்து நிறுத்திய மோசமான தொழில்துறை மந்தநிலையையும் வெளிப்படுத்துகிறது.

மின் விநியோக கட்டமைப்பு

இதன் எதிரொலியாக தொடர்ந்து நான்காவது மாதமாக கடந்த நவம்பரில் மின்சார பயன்பாடு 9,460 கோடியாக குறைந்தது. 2018 நவம்பர் மாதத்தில் வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் ஒட்டு மொத்த அளவில் 9,884 கோடி யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டு இருந்தது. மேலும் கடந்த நவம்பர் மாதம் வரையிலான மின்சார தேவை 1.2 சதவீதம் மட்டுமே வளர்ச்சி கண்டு இருந்தது. அதேசமயம் 2018 நவம்பர் வரையிலான 8 மாத காலத்தில் மின்சார தேவை 6.4 சதவீதம் வளர்ச்சி கண்டு இருந்தது.

ஏர்கண்டிஷனர்

அதேசமயம் மின்சார தேவை குறைந்ததற்கு வேறு 2 காரணங்களை சொல்கிறார் டெல்லி தேசிய பயிலகத்தின் பொது நிதி மற்றும் கொள்கை பேராசிரியர் என்.ஆர்.பானுமூர்த்தி. அவர் இது குறித்து கூறுகையில், முதலாவது ஏற்கனவே உள்ள திட்டங்கள் செயல்படாதது மற்றும் இரண்டாவது புதிய திட்டங்கள் வராதது. இந்த 2 காரணங்களுமே நம் நாட்டில் தென்படுகிறது என தெரிவித்தார்.