வெளிவராத விஜய் சேதுபதி படம் – கவலையில் சீனு ராமசாமி

 

வெளிவராத விஜய் சேதுபதி படம் – கவலையில் சீனு ராமசாமி

இயக்குனர் சீனு ராமசாமி தான் இயக்கிய ‘இடம் பொருள் ஏவல்’ திரைப்படம் 3 ஆண்டுகள் மேலாகியும் வெளியாகததால் அவர் மனப்புழுக்கத்தில் இருந்து வருகிறார்

சென்னை: இயக்குனர் சீனு ராமசாமி தான் இயக்கிய ‘இடம் பொருள் ஏவல்’ திரைப்படம் 3 ஆண்டுகள் மேலாகியும் வெளியாகததால் அவர் மனப்புழுக்கத்தில் இருந்து வருகிறார்.

சமீபத்தில் வந்த இயக்குனர்களில் சீனு ராமசாமி எல்லோரின் கவனத்தையும் ஈர்த்தார். அடித்தட்டு மக்களின் வாழ்க்கையிலிருந்து கதைகளை எடுத்து படமாக்குவதில் தனித்திறமையோடு இருந்து வருகிறார். 

idam porul yaeval

இவர் படங்கள்  நிச்சயமாக வசூல் செய்து விடும் என்கிற நம்பிக்கையை கொடுத்திருக்கிறார். இதனால் ஒரு படம் முடிந்தவுடன் அடுத்த படத்தின் படப்பிடிப்பை தொடங்கும் அளவுக்கு படங்கள் அவருக்கு தொடர்ந்து வருகிறது. ஆனால் அவரது ‘இடம் பொருள் ஏவல்’ படம் எடுத்து முடித்து பல ஆண்டுகள் ஆகியும் இன்னும் வெளியாகமல் இருப்பது அவருக்கு மன வேதனையைக் கொடுத்திருக்கிறது.

idam porul yaeval 2

“நம்முடைய வேலை படம் எடுத்துக்கொடுப்பதுதான் அதை வெளியிடுவதும் நிறுத்தி வைப்பதும் நம் கையில் இல்லை. அது தயாரிப்பாலர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்“ என மனப்புழுக்கத்தோடு சொல்லியிருக்கிறார் இயக்குனர் சீனு ராமசாமி