“வெளியே வந்தா,, குடையுடன் தான் வர வேண்டும்”.. திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு!

 

“வெளியே வந்தா,, குடையுடன் தான் வர வேண்டும்”.. திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2000ஐ கடந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2000ஐ கடந்துள்ளது. அதனால் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வழிகாட்டுதலோடு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். கொரோனாவில் இருந்து நாம் நம்மை காத்துக் கொள்ள சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால், ஊரடங்கு அமலில் இருப்பதால் அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியே வரும் நபர்கள் சமூக விலகலை காற்றில் பறக்க விடுகின்றனர். 

ttn

அதனால் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் ஒரு புதிய ஐடியாவை பின்பற்றுமாறு அறிவுறுத்தியுள்ளது. அதாவது அத்தியாவசிய தேவைகளுக்காக வீட்டை விட்டு வெளியே வரும் நபர்கள் குடை பிடித்துக் கொண்டு வர வேண்டும் என்பது தான் அந்த ஐடியா. இந்த நடைமுறை கேரளாவில் நடைமுறைபடுத்தப்பட்டதால் சமூக இடைவெளி முறையாக பின்பற்றப்பட்டது. அதனால், அதனை இங்கும் அமல்படுத்த எண்ணிய திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் குடையுடன் வெளியே வருமாறு அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.