வெளியே முன்ஜாமீன், உள்ளே ஜெயில்: பாவம் மீரா மிதுனின் நிலைமை!

 

வெளியே முன்ஜாமீன், உள்ளே ஜெயில்: பாவம் மீரா மிதுனின் நிலைமை!

மோசடி புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட பிக்பாஸ் பங்கேற்பாளர் மீரா மிதுனுக்கு நிபந்தனையுடன் கூடிய முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை: மோசடி புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட பிக்பாஸ் பங்கேற்பாளர் மீரா மிதுனுக்கு நிபந்தனையுடன் கூடிய முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்குச் செல்வதற்கு முன் அழகிப் போட்டி நடத்துவதாகக் கூறி பல பெண்களை ஏமாற்றியதாக மீராமிதுன் மீது சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்த ரஞ்சிதா என்பவர் புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் அடிப்படையில் அவரை விசாரணை செய்ய ஆஜராகுமாறு காவல்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதனால் தன்னை கைது செய்யக்கூடும் எனக் கூறி, மீரா மிதுன் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்தார்.

இதையடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருப்பதால் அவரால் அவரால் வெளியே வர முடியாது என்றும் தொழில் போட்டி காரணமாக தன் மீது பொய் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறி முன்ஜாமீன் வழங்க வேண்டும் என மீராமீதுன் உயர்நீதி மன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். 

meera

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், மீராமிதுனுக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். 50 ஆயிரம் ரூபாய்க்கான பிணையைச் செலுத்தி முன்ஜாமீன் பெற்றுக் கொள்ளவும், தேவைப்படும்போது விசாரணை அதிகாரி முன் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் நீதிபதி நிபந்தனை விதித்துள்ளார்

சமீபத்தில் பிக் பாஸ் வீட்டில் நடந்த டிக்டாக் டாஸ்க்கில் சரியாக விளையாடாத மீராவை பிக்பாஸ் ஜெயிலில் அடைத்தார். பிக்பாஸ் வீட்டிற்கு வெளியே முன்ஜாமீன் பெற்ற மீரா, பிக்பாஸ் வீட்டின் உள்ளே சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.