வெளியேறாவிட்டால் பசி – பட்டினியால் இறந்துவிடுவோம்! – டெல்லி தொழிலாளர்கள் உருக்கம்

வெளியேறாவிட்டால் பசி – பட்டினியால் இறந்துவிடுவோம்! – டெல்லி தொழிலாளர்கள் உருக்கம்

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது. வீட்டிலேயே முடங்கியிருக்கும்படி உத்தரவிட்டாலும் ஏழைகள், தொழிலாளர்களுக்கு எந்த ஒரு பொருளாதார உதவியையும் மத்திய அரசு அறிவிக்கவில்லை. மாநில அரசு அறிவித்துள்ள உதவியும் போதுமானதாக இல்லை. இதனால், வெளிமாநிலங்களில் இருந்து பெருநகரங்களுக்கு வேலைக்கு வந்தவர்கள் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பத் தொடங்கியுள்ளனர்.

டெல்லியில் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு கால்நடையாக செல்ல ஆரம்பித்துள்ளனர். நாங்கள் செல்லவில்லை என்றால், பசியால் இங்கேயே செத்துவிடுவோம் என்று பெண்மணி ஒருவர் கூறியது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது. வீட்டிலேயே முடங்கியிருக்கும்படி உத்தரவிட்டாலும் ஏழைகள், தொழிலாளர்களுக்கு எந்த ஒரு பொருளாதார உதவியையும் மத்திய அரசு அறிவிக்கவில்லை. மாநில அரசு அறிவித்துள்ள உதவியும் போதுமானதாக இல்லை. இதனால், வெளிமாநிலங்களில் இருந்து பெருநகரங்களுக்கு வேலைக்கு வந்தவர்கள் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பத் தொடங்கியுள்ளனர்.

rajasthan-workers-78

குஜராத்தில் இருந்து ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் ராஜஸ்தானுக்கு திரும்பிய நிலையில், டெல்லியிலிருந்து கூட்டம் கூட்டமாக மக்கள் ஹரியானா, உத்தரப்பிரதேசத்துக்குத் திரும்பத் தொடங்கியுள்ளனர். இது குறித்து ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தொழிலாளர்களிடம் கேள்வி எழுப்பியது. அப்போது பெண்மணி ஒருவர், “எங்களிடம் பணம் இல்லை. எங்களுக்கு இங்கே வேலையும் கிடைக்கவில்லை. நாங்கள் எதை சாப்பிடுவது? நாங்கள் இந்த நகரை விட்டு வெளியேறி சொந்த ஊருக்குத் திரும்பவில்லை என்றால் பசியாலேயே இறந்துவிடுவோம்” என்றார்.

rajasthan-workers

கைக்குழந்தைகள், சிறுவர்கள், சிறுமிகள் என்று கூட்டம் கூட்டமாக செல்லும் மக்களைப் பார்க்கும்போது பரிதாபமாக உள்ளது. பொது மக்கள் வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. வெளியே வந்தால் அடித்து துவைக்கிறது போலீஸ். ஏழைகளுக்கு உதவத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், பிரதமர் மோடியோ ஏழைகளுக்கு உதவுங்கள் என்கிறார்.
அரசு தன்னுடைய நிவாரண முகாம்களில் இவர்களை தங்கவைத்து உணவு வழங்கிவந்தால் மட்டுமே பட்டினி சாவுகள் ஏற்படுவதைத் தடுக்க முடியும். கொரோனா வைரஸ் பரவுவதையும் தடுக்க முடியும்.
பட்டினியால் இறப்போம்