‘வெளியிட்ட அறிவிப்பு தவறு’.. மறுவாக்கு எண்ணிக்கை நடத்தக்கோரி குடும்பத்துடன் வேட்பாளர் தற்கொலை முயற்சி !

 

‘வெளியிட்ட அறிவிப்பு தவறு’.. மறுவாக்கு எண்ணிக்கை நடத்தக்கோரி குடும்பத்துடன் வேட்பாளர் தற்கொலை முயற்சி !

அரியலூர் அருகே உள்ள அல்லி நகரம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு மருதமுத்து என்பவரும், பழனிவேல் என்பவரும் போட்டியிட்டனர்.

இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்ட ஊரக  உள்ளாட்சித் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இது வரை 16 மாவட்டங்களில் முழுவதுமாக வாக்கு எண்ணிக்கை முடிவடைந்து வெற்றி பெற்ற வேட்பாளர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், அரியலூர் அருகே உள்ள அல்லி நகரம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு மருதமுத்து என்பவரும், பழனிவேல் என்பவரும் போட்டியிட்டனர். இதற்கான வாக்கு எண்ணிக்கை பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஒன்றியத்தில் நேற்று நடந்தது. அதில், மருதமுத்து என்பவர் 130 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார் என்று அறிவிக்கப்பட்டது.

ttn

இந்நிலையில், அவரை எதிர்த்துப் போட்டியிட பழனிவேல் வாக்கு எண்ணிக்கையின் போது நான் தான் முன்னிலையில் இருந்தேன் என்றும் வெளியிட்ட முடிவு தவறு என்றும் மீண்டும் வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்றும் கூறினார். இதனையடுத்து, பழனிவேலும் அவரது ஆதரவாளர்களும் பெரம்பலூர்-அரியலூர் தேசிய நெடுஞ்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பழனிவேல் திடீரென குடும்பத்துடன்  மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்துள்ளார். அதனைக் கண்டு பதறிப் போன மக்கள் அவர்கள் அனைவரையும் மீட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.