வெளியானது நம்ம வீட்டு பிள்ளை படத்தின் 2வது லுக்!

 

வெளியானது நம்ம வீட்டு பிள்ளை படத்தின் 2வது லுக்!

தமிழ் திரையுலகில் மாஸ் ஹீரோக்களில் ஒருவராக ஜொலித்துக்கொண்டிருக்கும் சிவக்கார்த்திக்கேயன் தற்போது மித்ரன் இயக்கத்தில் நடித்துவருகிறார். இந்த நிலையில், இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் 16 வது படத்தில் நடித்துவருகிறார்.

வெளியானது நம்ம வீட்டு பிள்ளை படத்தின் 2வது லுக்!

தமிழ் திரையுலகில் மாஸ் ஹீரோக்களில் ஒருவராக ஜொலித்துக்கொண்டிருக்கும் சிவக்கார்த்திக்கேயன் தற்போது மித்ரன் இயக்கத்தில் நடித்துவருகிறார். இந்த நிலையில், இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் 16 வது படத்தில் நடித்துவருகிறார். இந்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் காலையில் வெளியான நிலையில் தற்போது இரண்டாவது லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

இப்படத்திற்கு நம்ம வீட்டு பிள்ளை என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. பாண்டிராஜ் இயக்கி வரும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுனம் தயாரித்து வருகிறது. படத்தின் டைட்டில் மற்றும்  டைட்டில் மற்றும் முதலாவது, இரண்டாவது லுக்கை  வைத்து பார்க்கும் போது கிராமத்து கதையாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ஐஸ்வர்யா ராஜேஷ், பாரதிராஜா, யோகி பாபு, ஆர்.கே.சுரேஷ், சூரி, நடராஜன் சுப்பிரமணியம், அனு இம்மானுவேல் ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு இமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். 

இப்படம் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வரும் அக்டோபர் 2ம் தேதி திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா அடுத்தடுத்து வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.