வெளியானது ஜிப்ஸி படத்தின் வெளியீட்டு தேதி!

 

வெளியானது ஜிப்ஸி படத்தின் வெளியீட்டு தேதி!

ஜிப்ஸி படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஜிப்ஸி மார்ச் 6 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர். 

‘குக்கூ’, ‘ஜோக்கர்’ ஆகிய படங்களுக்குப் பிறகு நடிகர் ஜீவா நடிப்பில் ராஜூமுருகன் இயக்கியிருக்கும்  திரைப்படம் ‘ஜிப்ஸி’. ஜோக்கர் படத்தில் ‘என்னங்க சார் உங்க சட்டம்’ என்று கேட்டு மத்திய, மாநில அரசுகளை திக்குமுக்காடச் செய்தார் அந்த படைப்பாளி. மதவெறி, சாதிவெறி, பதவி வெறிகளை ஆட்டம் காண வைக்கும் வகையில், அடுத்த படமான ஜிப்ஸியிலும் பல விமர்சனங்களை முன்வைத்துள்ளார். அதனால் தான் ஆரம்பத்திலிருந்தே ஜிப்ஸி படத்திற்குத் தணிக்கைச் சான்றிதழ் வழங்க   இருமுறை மறுப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும்  மத்திய அரசின் கொள்கைகளை விமர்சிக்கும் காட்சிகளை நீக்கக் கூறியது. இதற்கு மறுப்பு தெரிவித்த படக்குழு, தீர்ப்பாயத்திற்குச் சென்றதையடுத்து ஒருவழியாகப் படத்திற்கு  ‘ஏ’ (A) சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது.

ஜிப்ஸி

இந்நிலையில் ஜிப்ஸி படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஜிப்ஸி மார்ச் 6 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.