வெளியானது சியான் விக்ரம் 58- இன் டைட்டில் லுக்!

 

வெளியானது சியான் விக்ரம் 58- இன் டைட்டில் லுக்!

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் ‘சியான் விக்ரம் 58’ படத்திற்கான அதிகாரப்பூர்வ டைட்டில் லுக் மாலை 6 மணிக்கு வெளியானது.

copra

இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர் விக்ரம் தனது  58-வது படத்தில் நடிக்கிறார்.  இவர் ஏற்கனவே டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் ஆகிய படங்களை இயக்கியவர்.  இப்படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், வயாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.  இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான்இசையமைக்கிறார். ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில்  உருவாகவுள்ள இப்படத்தில் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் ,  ஸ்ரீநிதி ஷெட்டி, கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.  இந்த படத்தில் விக்ரம் பல தோற்றங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 

இந்நிலையில் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு சியான் விக்ரம் ரசிகர்களுக்கு விருந்து அளிக்கும் விதமாக  விக்ரம் 58 படத்துக்கு கோப்ரா என பெயரிடப்பட்டு அதற்கான டைட்டில் லுக் மற்றும் மோஷன் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.