வெளியானது அ.ம.மு.க வேட்பாளர் பட்டியல்: வேட்பாளர்கள் யார் யார் தெரியுமா?

 

வெளியானது அ.ம.மு.க வேட்பாளர் பட்டியல்:  வேட்பாளர்கள் யார் யார் தெரியுமா?

மக்களவைத் தேர்தலில் அ.ம.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சி வெளியிட்டுள்ளது

சென்னை: மக்களவைத் தேர்தலில் அ.ம.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சி வெளியிட்டுள்ளது.

மக்களவைத் தேர்தல்

மக்களவைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் தமிழக தேர்தல் களம் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது. முன்னதாக, தி.மு.க கூட்டணி கட்சிகளின் தொகுதிகள் ஒதுக்கீடு பட்டியலை அறிவித்தது. மேலும் வேட்பாளர்கள் பட்டியலை  இன்று மாலை தி.மு.க தலைவர் முக ஸ்டாலின் வெளியிடவுள்ளார். அ.தி.மு.க தங்கள் கூட்டணிக் கட்சிகளின் தொகுதிகள் ஒதுக்கீட்டை இன்று காலை அறிவிக்கவுள்ளது. 

இந்நிலையில் டி.டி.வி தினகரனின் அ.ம.மு.க கட்சி மக்களவை தேர்தலில் போட்டியிடப் போகும், முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. 

அ.ம.மு.க வேட்பாளர் பட்டியல் விவரம்:

திருவள்ளூர் (தனி) – பொன்.ராஜா

தென் சென்னை – இசக்கி சுப்பையா

திருபெரும்புதூர் – தாம்பரம் நாராயணன்

காஞ்சிபுரம் (தனி) – முனுசாமி

விழுப்புரம் (தனி) – வானூர் கணபதி

சேலம் – வீரபாண்டி செல்வம்

நாமக்கல் – சாமிநாதன் 

ஈரோடு – செந்தில்குமார் 

திருப்பூர் – செல்வம்

நீலகிரி (தனி) – ராமசாமி 

கோயம்பத்தூர் – அப்பாதுரை

பொள்ளாச்சி – முத்துக்குமார்

கரூர் – தங்கவேல் 

திருச்சி – சாருபாலா தொண்டைமான்

பெரம்பலூர் – ராஜசேகரன் 

சிதம்பரம் (தனி) – இளவரசன்

மயிலாடுதுறை – செந்தமிழன் 

நாகப்பட்டினம் – செங்கொடி

தஞ்சாவூர் – முருகேசன்

சிவகங்கை – தேர்போகி பாண்டி

மதுரை – டேவிட் அண்ணாதுரை 

ராமநாதபுரம் – ஆனந்த்

தென்காசி (தனி) – பொன்னுத்தாய் 

திருநெல்வேலி – ஞான அருள்மணி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இதை தொடர்ந்து,  சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியலில் முதற்கட்டமாக 9 பேர் கொண்ட பட்டியலையும் அமமுக சார்பில் துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் வெளியிட்டுள்ளார். 

 

சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியல்

பூந்தமல்லி (தனி) – ஏழுமலை, 

பெரம்பூர் – வெற்றிவேல், 

திருப்போரூர் – கோதண்டபாணி, 

குடியாத்தம் – ஜெயந்தி பத்மநாபன், 

ஆம்பூர் – பாலசுப்புரமணி, 

அரூர் – முருகன், 

மானமதுரை – மாரியப்பன் கென்னடி, 

சாத்தூர் – சுப்பிரமணியன், 

பரமக்குடி – முத்தையா ஆகியோர் பெயர்கள் இடம்பெற்றுள்ளது.