வெளியானது அஜித் கீழே விழுந்த வீடியோ!

 

வெளியானது அஜித் கீழே விழுந்த வீடியோ!

நேர்கொண்ட பார்வை படத்தைத் தொடர்ந்து நடிகர் அஜித் மீண்டும் ஹெச் வினோத்துடன் கூட்டணி அமைத்துள்ளார். தயாரிப்பாளர் போனி கபூரே  தயாரிக்கும் இந்த படத்திற்கு வலிமை என பெயரிடப்பட்டுள்ளது.

நேர்கொண்ட பார்வை படத்தைத் தொடர்ந்து நடிகர் அஜித் மீண்டும் ஹெச் வினோத்துடன் கூட்டணி அமைத்துள்ளார். தயாரிப்பாளர் போனி கபூரே  தயாரிக்கும் இந்த படத்திற்கு வலிமை என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில்  அஜித் இரண்டு தோற்றங்களில் நடிக்க இருப்பதாகவும், அதில் ஒன்று போலீஸ் கதாபாத்திரம் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது.போலீஸ் அதிகாரி கேரக்டர் என்பதால்  கார் சேசிங் காட்சிகள்  படத்தில் அதிகம் இருக்கும் என்று தெரிகிறது.  இப்படம் முழுக்க முழுக்க ஆக்‌ஷன் கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன் சென்னையில் நடந்த படப்பிடிப்பில் அஜித் டூப் இல்லாமல் பைக் ஓட்டும் ரிஸ்க்கான காட்சியில் நடித்துள்ளார். அப்போது அவருக்கு எதிர்பாராத விதமாக காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.  இதனால் #GetWellSoonTHALA என்ற ஹேஷ்டாக் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

இந்நிலையில் அஜித் கீழே விழும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.