வெளியானது.. ஃபேஸ்புக் புதிய லோகோ!

வெளியானது.. ஃபேஸ்புக் புதிய லோகோ!

பேஸ்புக் நிறுவனம் 15 ஆண்டுகளுக்கு பிறகு, தனது லோகோவை மாற்றியமைத்துள்ளது. அப்டேட் மூலம் செயலி மற்றும் அந்நிறுவனத்தின் இதர ஆப்களுக்கு மாற்றம் கிடைக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2004 ஆம் ஆண்டு பேஸ்புக் நிறுவனம் தொடங்கப்பட்டு தற்போது வரை 15 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளது. இதனையடுத்து, தனது நிறுவனம் மற்றும் செயலியில் சில மாற்றங்களை கொண்டுவர பேஸ்புக் நிறுவனம் முயற்சி செய்து வருகிறது.

fb

15 ஆண்டுகள் நிறைவுக்கு, புதிய லோகோவை ஃபேஸ்புக் நிறுவனம் வெளியிட்டுள்ளது. நிறுவனத்திற்கு தனி லோகோவையும் செயலிக்கு தனி லோகோ என தனித்தனியாக பேஸ்புக் நிறுவனம் வடிவமைத்து வெளியிட்டுள்ளது. இரண்டு லோகோவிற்கும் மிகப்பெரிய வேறுபாடுகள் இருக்கின்றன. 

இதேபோல் பேஸ்புக் நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் மற்ற செயலிகளான மெசேஞ்சர், இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் இதற்கு முன்னர் ஃபேஸ்புக் என்று குறிப்பிடப் பட்டிருப்பதை எங்கும் காண இயலாது. ஆனால் தற்போதிலிருந்து ஃபேஸ்புக் நிறுவனத்தின் கீழ் இருக்கும் அனைத்து செயல்களிலும் பேஸ்புக் நிறுவனத்துடையது என குறிப்பிடப்பட்டிருக்கும். 

குறிப்பாக இன்ஸ்டாகிராம் ஐகான் நிறம்போலவே, அதன் பக்கத்தில் ஃபேஸ்புக் என்ற லோகோ வடிவமைக்கப்பட்டிருக்கிறது. பேஸ்புக் நிறுவனத்திற்கு கிரே நிறத்தில் லோகோ வடிவமைக்கப்பட்டுள்ளது. ஃபேஸ்புக் செயலிக்கு முன்பு இந்த அடர் நீல நிறத்தைத் தவிர்த்து விட்டு தற்போது சற்று வெளிர் நீல நிறத்தை பேஸ்புக் நிறுவனம் பயன்படுத்தியிருக்கிறது. 

fb new logo

இன்னும் ஓரிரு வாரங்களில் அப்டேட் மூலம் இந்த மாற்றங்களே ஃபேஸ்புக் நிறுவனத்தின் கீழ் வரும் செயல்களிலும் அதிகாரப்பூர்வ இணைய பக்கத்திலும் காணலாம் எனவும் பேஸ்புக் நிறுவனம் சார்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

பயனாளர்கள் இந்த புதிய லோகோவை ஏற்றுக்கொள்ள சில நாட்கள் ஆகலாம். அதுவரை உங்களது விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன எனவும் நிறுவனத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.