வெளிமாநிலத் தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல நடவடிக்கை! – அமைதிகாக்க எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்

வெளிமாநிலத் தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல நடவடிக்கை! – அமைதிகாக்க எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்

தமிழகத்தில் தங்கியிருக்கும் வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர் திரும்ப அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருவதால் அமைதி காக்க வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஊரடங்கு காரணமாக தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போதிலும், வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர் திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளனர். சொந்த ஊர் திரும்புவதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து வருகிறது.

tamilnadu-workers-stuck-in-maharashtra

இது குறித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”வெளி மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்து பணிபுரியும் வெளிமாநிலத் தொழிலாளர்களை விருப்பத்தின் அடிப்படையில், அவரவர் மாநிலங்களுக்கு, சம்பந்தப்பட்ட மாநில அரசின் அனுமதியுடன், படிப்படியாக அனுப்பி வைக்க தமிழ்நாடு அரசு அனைத்துவிதமான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

migrant

இதுவரை 9 ஆயிரம் வெளிமாநிலத் தொழிலாளர்கள், சம்பந்தப்பட்ட மாநிலங்களின் ஒப்புதலுடன் 8 ரயில்களில் அவரவர் மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள வெளிமாநிலத் தொழிலாளர்களும் சம்பந்தப்பட்ட மாநிலங்களின் ஒப்புதலுடன் ரயில்கள் மூலம் அவரவர் மாநிலங்களுக்கு ஒரு வார காலத்திற்குள் அனுப்பி வைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே, அதுவரை வெளிமாநிலத் தொழிலாளர்கள் முகாம்களிலேயே தங்கியிருக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.