வெளிமாநிலங்களில் சிக்கியுள்ளவர்கள் வீடு திரும்ப சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்- ரயில்வே அமைச்சகம்

 

வெளிமாநிலங்களில் சிக்கியுள்ளவர்கள் வீடு திரும்ப சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்- ரயில்வே அமைச்சகம்

வெளிமாநிலத் தொழிலாளர்களை அந்தந்த மாநிலங்களுக்கு செல்ல மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியது. உரிய கட்டுப்பாடுகளை பின்பற்றி வெளிமாநிலங்களில் சிக்கியுள்ள தொழிலாளர்கள் பக்தர்கள் சுற்றுலா பயணிகள் மாணவர்களை அந்தந்த மாநில அரசுகள் அழைத்துக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவுறுத்தியது, இதனால் ஊரடங்கால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிக்கியுள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் நிம்மதி பெருமூச்சு அடைந்துள்ளனர்.

வெளிமாநில தொழிலாளர்கள்

இந்நிலையில் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் சிக்கியுள்ள புலம்பெயர் தொழிலாளர்கள், சுற்றுலாப் பயணிகள், மாணவர்கள் உள்ளிட்டோர் சொந்த ஊர் திரும்ப வசதியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று மத்திய ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் ரயில்வே நிர்வாகங்களுடன் தொடர்பு கொண்டு தேவையான ஏற்பாடுகளை செய்வதற்காக சிறப்பு அதிகாரிகளும் நியமிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரயில் பயணச்சீட்டு விற்பனைக்கு விரிவான வழிகாட்டுதல்கள் வெளியிடப்படும் என்றும், ரயில், ரயில் நிலையம், நடைமேடைகளில் பின்பற்ற வேண்டிய சமூக இடைவெளி & பிற பாதுகாப்பு வழிமுறைகளும் வெளியிடப்படும் என்றும் ளை இந்திய ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.