வெளிநாட்டுக்கு போகணுமா? அப்பம் ரூ.18 ஆயிரம் கோடி கட்டுங்க! நரேஷ் கோயலுக்கு செக் வைத்த நீதிமன்றம்!

 

வெளிநாட்டுக்கு போகணுமா? அப்பம் ரூ.18 ஆயிரம் கோடி கட்டுங்க! நரேஷ் கோயலுக்கு செக் வைத்த நீதிமன்றம்!

வெளிநாட்டுக்கு செல்ல வேண்டும் என்றால் ரூ.18 ஆயிரம் கோடி டெபாசிட் கட்ட வேண்டும் என ஜெட் ஏர்வேஸின் நரேஷ் கோயலுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் கூறியது.

இந்திய விமான போக்குவரத்து துறையில் கொடி கட்டி பறந்த தனியார் விமான சேவை நிறுவனம் ஜெட் ஏர்வேஸ். நரேஷ் கோயல் தலைமையிலான ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறப்பாக செயல்பட்டது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக நிதி நெருக்கடியால் சிக்கி தவித்த ஜெட் ஏர்வேஸ் தற்போது செயல்படாமல் முடங்கி கிடக்கிறது. மேலும் திவால் நடவடிக்கைக்கு ஜெட் ஏர்வேஸ் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

ஜெட் ஏர்வேஸ்

இந்நிலையில், கடந்த மே 25ம் தேதியன்று, ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலும், அவரது மனைவியும் லண்டன் செல்வதற்காக விமானம் நிலையம் சென்றனர். ஆனால், எல்.ஓ.சி. ( போலீசார் தேடப்படும் நபர்) அறிக்கையை காட்டி அவர்கள் இருவரும் விமானத்தில் இருந்து இறக்கப்பட்டனர். இதனையடுத்து, தன் மீது எந்தவொரு இ.சி.ஐ.ஆர்., எப்,ஐ.ஆர். இல்லாத நிலையில் எல்.ஓ.சி. வெளியிட்டதை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் நரேஷ் கோயல் வழக்கு தொடர்ந்தார்.

டெல்லி உயர் நீதிமன்றம்

டெல்லி உயர் நீதிமன்றம் நரேஷ் கோயல் மனுவை இன்று விசாரணைக்கு எடுத்தது. அப்போது நீதிமன்றம், நரேஷ் கோயல் வெளிநாட்டுக்கு செல்ல அனுமதி மறுத்தது. மேலும் கட்டாயம் வெளிநாட்டுக்கு செல்ல வேண்டும் என்றால் ரூ.18 ஆயிரம் கோடி டெபாசிட் கட்ட வேண்டும். மேலும், எல்.ஓ.சி. வெளியிட்டது தொடர்பாக பதில் அளிக்கும்படி அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.