வெளிநாட்டில் வேலை என்று ஏமாற்றி விற்கப்படும் தொழிலாளர்கள்? – ஐந்து ஆண்டுகளில் 34 ஆயிரம் பேர் மரணம்… பகீர் தகவல் வெளியானது

 

வெளிநாட்டில் வேலை என்று ஏமாற்றி விற்கப்படும் தொழிலாளர்கள்? – ஐந்து ஆண்டுகளில் 34 ஆயிரம் பேர் மரணம்… பகீர் தகவல் வெளியானது

வெளிநாட்டில் வேலைக்கு செல்பவர்கள் அங்கு விற்பனை செய்யப்படும் அவலம் நடந்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. 
ஏழ்மை காரணமாகவும் அதிகமாக சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்திலும் பலரும் துபாய், அபுதாபி போன்ற அரபு நாடுகளுக்கும் மலேசியா போன்ற நாடுகளுக்கும் கட்டிட வேலைக்காக பலரும் செல்கின்றனர்.

duabi

இவர்களிடம் பணத்தை வாங்கிக்கொண்டு வெளிநாட்டில் கொத்தடிமைகளாக அவர்களையே விற்கும் அவலத்தை சில ஏஜெண்டுகள் செய்வதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
குறிப்பாக துபாய், பக்ரைன் போன்ற மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்லப்படும் ஏழைகள் விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கென பிரத்தியேக ஆப்பையே இந்த கொடூரர்கள் உருவாக்கியதும் தெரியவந்துள்ளது.

passport

அடிமட்ட வேலைக்கு செல்பவர்களின் அறியாமையைப் பயன்படுத்தி விற்பனைகள் நடந்து வந்துள்ளது. இவர்களுக்கு பாஸ்போர்ட், விசா என்று எதுவும் சரியாக தெரியாது. ஏஜெண்ட் சொன்னதை நம்பி வெளிநாடு சென்று சிக்கிக்கொள்கின்றனர். பிறகு தங்கள் குடும்பத்தினரைக் கூட தொடர்புகொள்ள முடியாமல் மாட்டிக்கொள்கின்றனர்

dubai agent


வெளிநாடு செல்ல அணுகும் ஏஜெண்ட் அரசு அங்கீகாரம் பெற்றவரா, எந்த விசாவில் வெளிநாடு செல்ல உள்ளோம், எங்கு வேலை செய்யப் போகிறோம், என்ன வேலை செய்யப்போகிறோம், பிரச்னை என்றால் இந்திய தூதரகத்தைத் தொடர்புகொள்ள வாய்ப்புள்ளதா என்பதை எல்லாம் நன்கு விசாரித்துவிட்டு தான் வெளிநாட்டுக்கு செல்ல வேண்டும். இது பற்றிய விழிப்புணர்வை வெளிநாட்டுக்கு செல்பவர்கள் மத்தியில் ஏற்படுத்தினால் மட்டுமே இதுபோன்ற சட்டவிரோத மனித விற்பனையை தடுக்க முடியும் என்று சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.
இதற்கிடையே வளைகுடா நாடுகளில் வேலை பார்க்கும் இந்தியர்கள் சந்திக்கும் பிரச்னை, மரணம் பற்றி நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு வெளியுறவுத் துறை அமைச்சர் பதில் அளித்துள்ளார். 

jaisankar

அப்போது, “கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் 33,988 இந்தியர்கள் வளைகுடா நாடுகளில் உயிரிழந்துள்ளனர். இந்த ஆண்டு மட்டும் இதுவரை 4,823 பேர் உயிரிழந்துள்ளனர். வேலை தருவதாக கூறி ஏமாற்றி, வேறு கடினமான வேலை வாங்குவதாகவும் சம்பளம் தருவதில்லை என்றும் கூறி இந்த ஆண்டு இதுவரை 15,051 பேர் இந்திய தூதரகங்களைத் தொடர்புகொண்டு புகார் அளித்துள்ளனர்.

வெளிநாடுகளில் இந்தியர்கள் ஏமாற்றப்படுவதைத் தவிர்க்க, இந்திய தொழிலாளர்களுக்கு சரியான சம்பளம், விடுமுறை, ஒய்வு உள்ளிட்டவை கிடைக்க வெளியுறவுத் துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்றார்.