வெளிநாட்டில் இருந்து தமிழகத்துக்கு வர வேண்டுமா?.. உங்களுக்காக தான் இந்த செய்தி!

 

வெளிநாட்டில் இருந்து தமிழகத்துக்கு வர வேண்டுமா?.. உங்களுக்காக தான் இந்த செய்தி!

அவரவர் மாநிலங்களுக்கு அனுப்ப மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது. 

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. மக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்பதற்காக போக்குவரத்து சேவையும் முடக்கப்பட்டுள்ளது. அதனால், பல மாநிலங்களில் தமிழர்கள் சிக்கிக் கொண்டிருக்கின்றனர். அதனால் வெளிமாநிலங்களில் சிக்கிக் கொண்டிருப்பவர்களை மீட்டு அவரவர் மாநிலங்களுக்கு அனுப்ப மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது. 

ttn

இது தொடர்பாக வெளியாகியுள்ள செய்தி குறிப்பில், ” இந்தியா முழுவதும் கரோனா வைரஸ் தொற்று தடுப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. இதனால் தமிழ்நாட்டை சேர்ந்த பல மாணவர்கள் சுற்றுலா பயணிகள் மற்றும் வெளிநாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் பணியாளர்கள் உள்ளிட்ட நம் நாட்டிற்கு வர இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

அவ்வாறு வெளிநாடுகளில் இருக்கும் தமிழர்கள் உடனடியாக தமிழ் நாட்டிற்கு திரும்ப விரும்புவர்களின் நலனுக்காகவும் அவர்களின் குடும்பத்தினரின் நலனைக் காத்திடும் நோக்கிலும் அவர்களது எண்ணிக்கையினை அறியும் வகையிலும் தமிழ் நாட்டிற்கு திரும்ப வருவதற்கு தனிமைப்படுத்தல் வசதிகளை ஏற்படுத்தவும் அவர்களைப் பற்றிய தகவல்களை பெறுவதற்காக இணைய வசதி புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.வெளிநாடுகளிலிருந்து தமிழ் நாட்டுக்கு திரும்ப விரும்பும் தமிழர்கள் nonresidentamil.org என்ற இணையதள முகப்பில் பதிவுகள் செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.