வெளிநாடுகளுக்கு விமானத்தில் பயணிப்பவர்களுக்கான முக்கிய செய்தி!

 

வெளிநாடுகளுக்கு விமானத்தில் பயணிப்பவர்களுக்கான முக்கிய செய்தி!

வெளிநாடுகளுக்குச் செல்லும்போது, நீங்கள் இந்த நாட்டைச் சேர்ந்தவர் தான் என அடையாளம் காட்டும் ஒரே ஆவணம் உங்கள் பாஸ்போர்ட் மட்டுமே. எனவே எந்த சூழ்நிலையிலும் அதை இழப்பது மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம். பாஸ்போர்ட் திருடப்படுவதையோ அல்லது சேதமடைவதையோ நம்மால் தடுக்க முடியுமா? என்று  உறுதியாக கூற முடியாது. என்றாலும் வீட்டிலிருந்து வெளியேறுவதற்கு முன்பு நாம் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கலாம்.

வெளிநாடுகளுக்குச் செல்லும்போது, நீங்கள் இந்த நாட்டைச் சேர்ந்தவர் தான் என அடையாளம் காட்டும் ஒரே ஆவணம் உங்கள் பாஸ்போர்ட் மட்டுமே. எனவே எந்த சூழ்நிலையிலும் அதை இழப்பது மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம். 

பாஸ்போர்ட் திருடப்படுவதையோ அல்லது சேதமடைவதையோ நம்மால் தடுக்க முடியுமா? என்று  உறுதியாக கூற முடியாது. என்றாலும் வீட்டிலிருந்து வெளியேறுவதற்கு முன்பு நாம் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கலாம்.

airport

புறப்படுவதற்கு முன்பு பாஸ்போர்ட், விசா போன்ற பயணத்திற்கு தேவையான ஆவணங்களை ஒரு நகல்(ஜெராக்ஸ்) எடுத்து வைத்துக்கொள்ளலாம். உங்கள் லக்கேஜ்ஜில் ஒரு செட் நகல்களை எடுத்துச் செல்லுங்கள், மற்றொரு செட் நகல்களை உங்கள் குடும்பத்தினர் அல்லது நண்பர்களிடம் கொடுத்து வையுங்கள். மேலும், அவற்றை உங்கள்  குடும்ப உறுப்பினர் ஒருவருக்கோ அல்லது நண்பருக்கோ மின்னஞ்சல்(ஈமெயில்) அனுப்புங்கள். நீங்கள் கொண்டு செல்லும் நகல்களை இழந்துவிட்டால் அல்லது சேதப்படுத்தினால், அந்த விவரங்கள் எல்லாம் நம் ஈமெயிலில் இருக்கும், அதை நாம் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

அசல் தொலைந்துவிட்டால் உங்கள் பாஸ்போர்ட்டின் ஜெராக்ஸை காண்பிப்பது கட்டாயமில்லை என்றாலும், புகார் அளிக்கும்போது, ​​பாஸ்போர்ட் எண் உட்பட தேவையான விவரங்களை இந்த நகல்கள் நமக்கு உதவும். மேலும், நாம் இன்சூரன்ஸ் செய்திருந்தால் பாஸ்போர்ட் தொலைந்ததற்கு நாம் இழப்பீடு பெற்றுக்கொள்ள முடியும். நீங்கள் ஒரு ட்ராவல் ஏஜென்சி மூலம் முன்பதிவு செய்திருந்தால், அவர்களின் தொடர்பு எண்களை, குறிப்பாக எந்தவொரு எமெர்ஜென்சி நம்பர்களையும் குறித்து வைப்பது மிகவும் பயனுள்ளதாக அமையும்.

flight-passenger-0

சரி, எல்லா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுத்திருந்தாலும், உங்கள் பாஸ்போர்ட்டை இழக்க நேர்ந்தால், பீதி அடைய வேண்டாம். உங்களிடம் இது பற்றி நிறைய கேள்வி கேட்கப்படலாம், அதற்கு எந்த நிலையிலும் தயாராக இருக்கவேண்டும். ஏனென்றால் போலி பாஸ்போர்ட்டுகள் பெரும்பாலும் திருடப்பட்ட பாஸ்போர்ட்டிலிருந்து பெறப்பட்ட விவரங்களின் அடிப்படையில் தயாரிக்கப்படுகின்றன. இது உலகம் முழுக்க இலாபகரமான வியாபாரம். எனவே பாஸ்போர்ட் தொலைந்தது பற்றி விசாரிக்கும் போது தயவு தாட்சனை பார்க்க மாட்டார்கள்.  ஏனெனில் நீங்கள் உண்மையாகவே பாதிக்கப்பட்டவரா? என்பதை அவர்கள் உறுதிப்படுத்த வேண்டும். எனவே கேள்விகளுக்கு நேர்மையாக முறையில் பதிலளிப்பது மிகவும் முக்கியம்.

நீங்கள் உங்களது பாஸ்போர்ட்டைக் ஏதேனும் ஒருவிதத்தில் தவற விட்டிருந்தீர்கள் என்றால் உடனே போலீசில் புகார் அளியுங்கள். மற்றொரு பாஸ்போர்ட் பெற புகாரின் நகல் உங்களுக்குத் தேவைப்படும் என்பதால் இது மிகவும் முக்கியமானது. பயணத்தில் இருக்கும்போது உங்கள் பாஸ்போர்ட்டை தவறவிடுவது மிகவும் தொந்தரவாக இருக்கும், ஏனெனில் நீங்கள் ஏர்போர்ட்டை விட்டு வெளியேற முடியாது. இந்த நேரத்தில் நீங்கள் பதிவு செய்திருந்த விமான நிறுவனம் உங்களுக்கு உதவலாம். இல்லையென்றால் உடனே இம்மிகிரேஷன் கவுண்டரை அணுகவும். அவர்களிடம் என்ன நடைமுறை என்பதைக் கேட்டு தெரிந்துகொள்ளலாம்.

immigration-counter

பயணத்திற்கு முன்பு உங்களது டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளின் விவரங்களை மறக்காமல் ஈமெயிலில் சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்.  அதே போல் கார்டுகளை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள். தவறவிடும் பட்சத்தில் உடனே சம்பந்தப்பட்ட வங்கியை அணுகி உங்கள் அட்டையை செயலிழக்கச் செய்யுங்கள். 

cards

மேற்சொன்ன அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றினால் மிகவும் பாதுகாப்பான மற்றும் வெற்றிகரமான பயணத்தை நீங்கள் அனுபவிக்கலாம்.