வெளவால் சாப்பிட்டால் ஆஸ்துமா குணமாகும்!

 

வெளவால் சாப்பிட்டால் ஆஸ்துமா குணமாகும்!

தற்போது சீனாவை கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருவது போல கடந்த சில நாட்களுக்கு முன் கேரளாவில் நிபா வைரஸ் கோர தாண்டவம் ஆடியது.

தற்போது சீனாவை கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருவது போல கடந்த சில நாட்களுக்கு முன் கேரளாவில் நிபா வைரஸ் கோர தாண்டவம் ஆடியது.  நிபா வைரஸ் நோய் பழந்தின்னி வெளவால்கள் மூலம் பரவுகிறது என மருத்துவர்கள் தெரிவித்தனர். எனவே அணில், வெளவால்கள் கடித்த பழங்களை சாப்பிடக்கூடாது. பலாப்பழம், கொய்யாப்பழம், மாம்பழம் போன்றவற்றை சுத்தமாக கழுவியபிறகுதான் சாப்பிட வேண்டும். வெளவால் கழிவுகளில் இருந்துதான் நிபா வைரஸ் பரவுகிறது என தெரிவிக்கப்பட்டது. சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸால் ஏற்படும் உயிரிழப்பு ஆயிரத்தை கடந்த நிலையில் அந்த வைரஸ்க்கு காரணம் வெளவால் என்றும் கூறப்பட்டது.

indonesia bat meat

இந்நிலையில் இந்தோனேசியாவிலுள்ள மானடோ தீவில்வெளவால் சாப்பிட்டால் ஆஸ்துமா குணமாகும் என்ற நம்பிக்கையில் அங்குள்ள உண்வகங்களில் படுஜோராக விற்பனையாகிறது வெளவால் கறி. வெளவால் கறியுடன் தேங்காய் பாலும் கொடுக்கப்படுகிறது. அந்த சுவையான வெளவால் உணவுக்கு பானிக்கி என பெயரிடப்பட்டுள்ளது.